For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்பா.... அசுர பலத்தில் பேட்டிங் படை..எப்படி பந்துவீச்சையும் சமாளிக்கும்..சாதிக்குமா பஞ்சாப் கிங்ஸ்

சென்னை: நடப்பாண்டு ஐபிஎல்-ல் பேட்டிங் லைனிங்கில் மிகப்பெரும் சக்தியாக பஞ்சாப் கிங்ஸ் அணி உருவெடுத்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகளவில் வீரர்களை ஏலம் எடுத்திருந்தது. பல வீரர்களை கழட்டி விட்டிருந்த அந்த அணி அனைத்து துறைகளையும் பலப்படுத்த ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டது.

டிவிஸ்ட்.. ஆர்சிபியிலுருந்து 9 முக்கிய வீரர்கள் நீக்கம்.. சாட்டையை சுழற்றிய கோலி.. முழு லிஸ்ட்!டிவிஸ்ட்.. ஆர்சிபியிலுருந்து 9 முக்கிய வீரர்கள் நீக்கம்.. சாட்டையை சுழற்றிய கோலி.. முழு லிஸ்ட்!

அந்தவகையில் ஐபிஎல்-ல் எந்த விதமான பந்துவீச்சாளர்களையும் சமாளிக்கும் வகையில் பேட்டிங்கை வைத்துள்ளது. அதற்கான காரணங்களை பார்ப்போம்.

 தொடக்கமே அதிரடி

தொடக்கமே அதிரடி

கடந்த 3 சீசன்களிலும் எந்த அணியும் கட்டுப்படுத்த முடியாத பேட்ஸ்மேனாக திகழ்பவர் கே.எல்.ராகுல். இவர் 2018ம் ஆண்டு 13 போட்டிகளில் 659 ரன்கள் அடித்து அதிக ரன் குவித்த வீரரானார். அதே போல் 2019ல் அதிக ரன் எடுத்த வீரர் பட்டியலில் 2ம் இடம் பெற்றார். கடந்த ஆண்டு 14 போட்டிகளில் விளையாடிய அவர் 670 ரன்களை குவித்து தடுக்க முடியாத சக்தியாக திகழ்கிறார்.

யுனிவெர்ஸல் பாஸ்

யுனிவெர்ஸல் பாஸ்

ஐபிஎல்-ல் இதுவரை யாரும் செய்யாத பல சாதனைகளை செய்தவர் கிறிஸ் கெயில். இதுவரை 132 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 4772 ரன்கள் குவித்துள்ளார். 30 பந்துகளில் அதிவேக சதம் அடித்த வீரர் இவர்தான். சிக்ஸருக்கு பெயர் போன கெயில் இதுவரை 349 சிக்ஸர்களை சிதறடித்துள்ளார். இதே போல் 2011 - 2012 என தொடர்சியாக 2 முறை அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மாலன்

மாலன்

அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன் வேட்டை ஆடுவதில் இங்கிலாந்தின் டேவிட் மாலன் கில்லாடி. டி20 கிரிக்கெட் போட்டிகளில் உச்சக்கட்டமாக இவரின் பேட்டிங் ஆவ்ரேஜ் 53.43 ஆகும். இதுவரை 19 டி20 போட்டிகளில் ஆடியுள்ள மாலன், 855 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதமும் 9 அரை சதமும் அடங்கும். கடந்த டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 51 பந்துகளில் 103 ரன்கள் அனைவரையும் அசரடித்தார்.

பூரண்

பூரண்

நிக்கோலஸ் பூரண் அதிரடி ஆட்டத்திற்கு சிறப்பானவராக பார்க்கப்படுகிறார். இதுவரை 21 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 521 ரன்களை குவித்துள்ளார். அதுவும் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 165.39 ஆகும். கடந்த ஆண்டு 37 பந்துகளில் 77 ரன்களை இவர் அடித்தது பலரால் பேசப்பட்டது. அதே போல் இவர், கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அதிக ரன் குவித்த வீரராவார்.

அகர்வால்

அகர்வால்

கடந்த சீசன்களிலும் மயங்க் அகர்வால் அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளார். இதுவரை 147 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 3393 ரன்களை குவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல்-ல் 13 போட்டிகளில் ஆடிய அகர்வால் 332 ரன்களை எடுத்தார். அதே போல் கடந்தாண்டு 11 போட்டிகளில் ஆடி 424 ரன்களை குவித்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி பலமான பேட்டிங் படையுடன் உள்ளது.

Story first published: Sunday, February 21, 2021, 12:55 [IST]
Other articles published on Feb 21, 2021
English summary
Punjab Kings Have The Strongest Batting Unit IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X