செஞ்சுரி அடித்துவிட்டு வடிவேலு பாணியில் செலிபிரேஷன்.. வைரலான போட்டோ

Posted By:

டெல்லி: நேற்று டெல்லியில் நடந்த ரஞ்சி போட்டி ஒன்றில் செஞ்சுரி அடித்த வீரர் ஒருவர் மிகவும் வித்தியாசமாக அதை கொண்டாடியது தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. பஞ்சாப் அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடிய 'குர்கீரட் கான்' என்ற ஆல் ரவுண்டர் வீரர் தான் இந்த வைரலுக்கு சொந்தக்காரர். செஞ்சுரி அடித்துவிட்டு வடிவேலு பாணியில் அவர் போஸ் கொடுத்தது வைரல் ஆனது.

கடந்த சில நாட்களாக பிசிசிஐயால் ரஞ்சி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று பஞ்சாப் அணியும், சத்திஸ்கர் அணியும் மோதின. இதில பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடினர். தொடக்கத்தில் இருந்தே அந்த அணி அதிரடியாக விளையாடியது.

Punjab team all-rounder celebrated his century in a very unique manner

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் முக்கியமான ஆல் ரவுண்டரான குர்கீரட் கான் என்ற வீரர் மிகவும் அதிரடியாக ஆடி 111 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். இதில் 17 போர்களும் அடக்கம். மிகவும் சிறப்பாக விளையாடிய இவர் செஞ்சுரி அடித்த போது அதை மிகவும் வித்தியாசமாக கொண்டாடினார்.

அதன்படி இவர் செஞ்சுரி அடித்தவுடன் உடனடியாக பேட்டை வேகமா சுற்றிவிட்டு பின் அதை தரையில் போட்டு இருக்கிறார். அதற்கு அடுத்து அப்படியே தரையில் படுத்து போஸ் கொடுத்து இருக்கிறார். நடிகர் வடிவேல் கிரிக்கெட் சம்பந்தமான காமெடி ஒன்றில் படுத்து இருப்பது போல இவர் அந்த வீடியோவில் படுத்து இருக்கிறார்.

இதன் காரணமாக அங்கு கோவமாக பந்து வீசிவிட்டு நின்ற பவுலர் சிரிக்கத் தொடங்கி இருக்கிறார். அதையடுத்து வரிசையாக அங்கு நின்ற அனைவரும் அவரைப் பார்த்து சிரித்து இருக்கின்றனர்.

Story first published: Saturday, November 4, 2017, 15:09 [IST]
Other articles published on Nov 4, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற