For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாஹல் இதில் கூட விளையாடுவார் என தவறாக எண்ணி விட்டேன்.. இந்திய அணியில் வாய்ப்பு... மனம் திறந்த ராகுல் !

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் சுவாரஸ்ய தகவல் ஒன்றை ராகுல் தேவட்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே டெஸ்ட் தொடரை அடுத்து வரும் மார்ச் 14ம் தேதி முதல் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று வெளியிடப்பட்டது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்! 6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

இந்திய அணியில் முதல் முறையாக ராகுல் தேவட்டியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த செய்தி அறிந்த போது சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்ததாக ராகுல் தேவட்டியா தெரிவித்துள்ளார்.

டி20 தொடர்

டி20 தொடர்

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இஷாந்த் கிஷான், சூர்யகுமார் யாதவ், ராகுல் தேவட்டியா ஆகியோருக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராகுல் தேவட்டியா

ராகுல் தேவட்டியா

ஐபிஎல்-ல் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் ராகுல் தேவட்டியா கடந்த சீசனில் சிறப்பான பங்களிப்பை ஆற்றினார். மொத்தம் 14 போட்டிகளில் ஆடிய அவர் 255 ரன்களை எடுத்தார். மேலும் பந்துவீச்சில் 10 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் இவருக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யுவேந்திர சாஹல்

யுவேந்திர சாஹல்

இது குறித்து பேசிய ராகுல் தேவட்டியா, நான் இந்திய அணியில் தேவாகியுள்ளேன் என முதலில் சாஹல் தான் கூறினார். ஆனால் அவர் எப்போதும் போன்று விளையாடுவதாக எண்ணினேன். பின்னர் மோஹித் சர்மா எனக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போதுதான் எனக்கு உண்மை என தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஹரியானா

ஹரியானா

வாழ்க்கை நிறைய சவால்களை தருகிறது. ஹரியானா மாநிலத்தில் இருந்து ஏற்கனவே 3 ஸ்பின்னர்கள் ( யுவேந்திர சாஹல், அமித் மிஷ்ரா, ஜெயந்த் யாதவ்

) இந்திய அணிக்காக ஆடியுள்ளனர். எனவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயம் பயன்படுத்திக்கொள்வேன்.

ட்ரஸ்ஸிங் ரூம்

ட்ரஸ்ஸிங் ரூம்

இந்திய அணியின் ஓய்வு அறை விட்த்தியாசமாக இருக்கும் எனக் கேள்விப்பட்டுள்ளேன். எனவே ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோருடன் அறையை பகிர்ந்து கொள்வது பாக்கியம் என தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, February 23, 2021, 11:12 [IST]
Other articles published on Feb 23, 2021
English summary
Rahul Tewatia op Yuzvendra Chahal informed him about his India call-up
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X