For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மழைதான் விளையாடுகிறது…! ஆஸி.யும், இங்கிலாந்தும் வேடிக்கை தான் பார்க்கிறது.. இது ஆஷஸ் பரிதாபம்..!

லண்டன்: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் கருதப்படுவதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

Rain interrupted ashes 2nd test between england and australia

ஆஷஸ் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து முன்னிலை பெற்ற போதும், ஸ்டீவ் ஸ்மித்தின் அசத்தல் சதத்தால், இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்குகிறது. ஆனால் தொடர் மழை காரணமாக 2வது போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா 1க்கு பூஜ்யம் என முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்தை பொறுத்தவரையில் 7 ஆஷஸ் கோப்பைகளை வென்றிருக்கிறது. கடைசியாக 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் கோப்பையை வென்றது.

இந்த நாள் ஞாபகம் இருக்கா..? 29 வருஷத்துக்கு முன்னாடி...! சச்சின் பற்றி சினிமா வசனம் பேசிய பிசிசிஐ இந்த நாள் ஞாபகம் இருக்கா..? 29 வருஷத்துக்கு முன்னாடி...! சச்சின் பற்றி சினிமா வசனம் பேசிய பிசிசிஐ

முன்னதாக, இங்கிலாந்து நட்சத்திர பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக, இளம் சாதனை வீரர் ஆர்ச்சர் அறிமுகமாகி இருக்கிறார்.

Story first published: Wednesday, August 14, 2019, 18:10 [IST]
Other articles published on Aug 14, 2019
English summary
Rain interrupted ashes 2nd test between England and Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X