For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டோ பிடித்துப் போய் அஸ்ஸாமுடன் மோதிய கர்நாடக ரஞ்சி வீரர்கள்!

குவஹாத்தி: அஸ்ஸாமுடன் நடந்த ரஞ்சிக் கோப்பைப் போட்டியின்போது கர்நாடக வீரர்களுக்குப் பெரும் சோதனை காத்திருந்தது. அஸ்ஸாம் அணியினருடன் கூட எளிதாக மோதி விட்டார்கள். ஆனால் அந்தப் போட்டி நடந்த மைதானத்திற்குப் போவதற்குள்தான் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டனர்.

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பைப் போட்டிகள் தொடங்கியுள்ளன. கர்நாடக அணி அஸ்ஸாம் அணியுடன் மோதியது. குவஹாத்தியில் இப்போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாள் போட்டியான நேற்றுதான் பெரும் கூத்து நடந்து விட்டது.

அக்டோபர் 1 முதல்

அக்டோபர் 1 முதல்

அக்டோபர் 1ம் தேதி முதல் நடந்து வந்த இப்போட்டி நேற்று டிராவில் முடிந்தது. ஆனால் நேற்று காலை செம கூத்து அரங்கேறியது.

பஸ் வரவில்லை

பஸ் வரவில்லை

முதல் 3 நாட்களும் கர்நாடக வீரர்களை பிக்கப் செய்வதற்கு அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம் பஸ்ஸை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் நேற்று பஸ் வரவில்லை. இதனால் வீரர்கள் காத்திருந்து ஏமாந்தனர்.

பலமுறை கோரியும் பஸ் வரவில்லை

பலமுறை கோரியும் பஸ் வரவில்லை

இதுகுறித்து கர்நாடக அணியின் லாஜிஸ்டிக்ஸ் மேலாளர் ரமேஷ் ராவ் கூறுகையில், காலை 7 மணிக்கு பஸ்ஸை அனுப்புமாறு கேட்டிருந்தோம். ஆனால் வரவில்லை. பல முறை கேட்டும் பஸ் வந்தபாடில்லை.

ஆட்டோ பிடிங்கப்பா

ஆட்டோ பிடிங்கப்பா

நேரம் போய்க் கொண்டிருந்ததால் ஆட்டோக்களைப் பிடித்து மைதானத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம் என்றார். இதையடுத்து கர்நாடக வீரர்கள் ஆட்டோக்களைப் பிடித்து மைதானத்திற்கு விரைந்தனர்.

9 ஆட்டோ

9 ஆட்டோ

மைதானத்திற்கும் வீரர்கள் தங்கியிருந்த இடத்திற்கும் இடையிலான தொலை 6 கிலோமீட்டராகும். மொத்தம் 9 ஆட்டோக்களைப் பிடித்து வீரர்கள் மைதானத்திற்குச் சென்றனர்.

ஆட்டோக்காரர்கள் செய்த சேட்டை

ஆட்டோக்காரர்கள் செய்த சேட்டை

ஆஹா.. பெரிய சவாரியா வருதே என்று நினைத்த ஆட்டோக்காரர்களோ, வழக்கமாக வாங்கும் தொகையை விட பல மடங்கு அதிகம் கேட்டு கர்நாடக வீரர்களை மேலும் டென்ஷனாக்கி விட்டனராம்.

ரோடாய்யா இது

ரோடாய்யா இது

அடுத்த கொடுமை அவர்கள் பயணித்த சாலையின் குண்டும் குழியும். அந்த குண்டும் குழியுமான சாலையில் ஆட்டோவில் பயணித்ததால் வீரர்கள் பலருக்கு வயிறு கலங்கிப் போய் விட்டதாம்.

கால்பந்து மைதானத்திற்குப் போன கேப்டன் வினய்

கால்பந்து மைதானத்திற்குப் போன கேப்டன் வினய்

இந்தப் பஞ்சாயத்து போதாதென்று கேப்டன் வினய்யும், பயிற்சியாளர் பிரஷாந்த்தும் கிரிக்கெட் மைதானத்திற்குப் பதில் கால்பந்து மைதானத்திற்குப் போய் விட்டனராம். அதாவது அங்கு அப்போது ஐஎஸ்எல் தொடர் நடந்து கொண்டிருப்பதால் அங்கு கொண்டு போய் விட்டார் ஆட்டோ டிரைவர். கிரிக்கெட் போட்டிக்கு போகனும்ப்பா என்று வினய் சொன்னதும் ஆட்டோவை கிரிக்கெட் ஸ்டேடியத்திற்குத் திருப்பியுள்ளார் டிரைவர்.

சர்வதேச வீரர்களுக்கு வந்த நேரம்

சர்வதேச வீரர்களுக்கு வந்த நேரம்

கர்நாடக அணியில் ராபின் உத்தப்பா, வினய், மனீஷ் பாண்டே, அபிமன்யூ மிதுன் (நடிகை ராதிகாவின் வருங்கால மருமகன்) ஆகியோர் சர்வதேச அளவில் இந்திய அணியில் இடம் பெற்றவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Monday, October 5, 2015, 14:35 [IST]
Other articles published on Oct 5, 2015
English summary
Ranji Trophy champions Karnataka were made to hire auto rickshaws to reach the stadium to play against Assam on Sunday (October 4), the fourth and final day of their first round match. And in a comical twist, captain R Vinay Kumar and trainer Prashant Pujar were taken to football venue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X