For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பீல்டிங், பவுலிங் 'கோச்சு'களுக்கு "ஓய்வு".. இந்திய அணியின் "இயக்குநர்" ஆனார் ரவி சாஸ்திரி

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய வரலாறைப் படைத்துள்ளது. இதுவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இல்லாத அளவில் புதிதாக அணி இயக்குநர் என்ற பதவியை அது உருவாக்கியுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து ஒரு நாள் தொடருக்கான அணி இயக்குநராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல பீல்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களையும் ஓய்வில் அனுப்பி விட்டது. மேலும் பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கு உதவி செய்ய 2 இந்திய முன்னாள் வீரர்களை அது அறிவித்துள்ளது.

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை மிக மோசமாக இந்தியா இழந்துள்ள நிலையில் இன்று அதிரடியான இந்த முடிவுகளை பிசிசிஐ அறிவித்தது.

சாஸ்திரி நியமனம்.. எதிர்பாராதது!

சாஸ்திரி நியமனம்.. எதிர்பாராதது!

இதில் சாஸ்திரி நியமனம் எதிர்பாராதது. அதாவது இயக்குநர் என்ற பதவியை உருவாக்கியுள்ளது ஆச்சரியமான செய்தியாக வந்துள்ளது. இதுவரை அணி மேலாளர் என்ற அளவில்தான் அணி பொறுப்பாளர்கள் இருந்தனர். ஆனால் முதல் முறையாக இயக்குநர் என்ற பதவியை உருவாக்கியுள்ளது கிரிக்கெட் வாரியம்.

சஞ்சய் பாங்கர்.. எதிர்பார்த்தது!

சஞ்சய் பாங்கர்.. எதிர்பார்த்தது!

அதேசமயம், பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கு உதவி செய்ய இரண்டு உதவி பயிற்சியாளர்களை இந்தியா நியமித்துள்ளது. அவர்கள் சஞ்சய் பாங்கர் மற்றும் பரத் அருண். இருவரும் முன்னாள் வீரர்கள். திறமையாளர்கள். எனவே இவர்களின் நியமனம் எதிர்பார்த்த ஒன்றாக அமைந்துள்ளது - குறிப்பாக பாங்கர் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

நீங்க போய் ரெஸ்ட் எடுங்கப்பா...

நீங்க போய் ரெஸ்ட் எடுங்கப்பா...

அதேபோல பீல்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ. இதுவும் கூட எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த இரண்டு துறையிலும்தான் இங்கிலாந்தில் செமத்தியாக சொதப்பி வருகிறது இந்தியா. எனவே பீல்டிங் பயிற்சியாளர் டிரெவர் பென்னி மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஜோ தேவஸ் ஆகியோரை ஓய்வில் அனுப்பியுள்ளது பிசிசிஐ.

பீல்டிங் சொல்லிக் கொடுக்கப் போகும் ஸ்ரீதர்

பீல்டிங் சொல்லிக் கொடுக்கப் போகும் ஸ்ரீதர்

புதிய பீல்டிங் பயிற்சியாளராக ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தீவிர ஆலோசனைக்குப் பின்னர் முடிவு

தீவிர ஆலோசனைக்குப் பின்னர் முடிவு

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த சில வாரங்களாக அனைத்து பிசிசிஐ நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் இறுதியில் ரவி சாஸ்திரியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. வருகிற இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியை நிர்வகித்து, மேற்பார்வை பார்த்து உரிய ஆலோசனகளை வழங்கி, வழி நடத்தும் பொறுப்பு சாஸ்திரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கோச் பிளட்சர்தான்.. ஆனால்...!

கோச் பிளட்சர்தான்.. ஆனால்...!

தலைமைப் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் தொடருவார். அதேசமயம், ஒட்டுமொத்த இந்திய அணியின் முழுப் பொறுப்பையும் ரவி சாஸ்திரி பார்த்துக் கொள்வார்.

பிரேக்...!

பிரேக்...!

அணியின் ஆதரவு முயற்சிகளுக்கு சிறிய பிரேக் தரும் வகையில் பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு நாள் தொடரில் பணியாற்ற மாட்டார்கள்.

ஆல்ரவுண்டர் பாங்கர் - அருண்

ஆல்ரவுண்டர் பாங்கர் - அருண்

முன்னாள் ஆல் ரவுண்டர் சஞ்சய் பாங்கர் மற்றும் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் பரத் அருண் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாக செயல்படுவர். பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் செயல்படுவார் என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன.

Story first published: Tuesday, August 19, 2014, 19:16 [IST]
Other articles published on Aug 19, 2014
English summary
In a surprise move on Tuesday, the Board of Control for Cricket in India (BCCI) named former India captain Ravi Shastri as Director, Indian Team, for the five-match ODI series against England besides appointing Sanjay Bangar as assistant to chief coach Duncan Fletcher. While Bangar's appointment comes as a welcome surprise, appointing a Team Director is possibly a first in the history of Indian cricket and appears more to be a knee-jerk reaction to India's embarrassing defeat in the Test series. In a media release from the its Honorary Secretary, Sanjay Patel, the BCCI announced the appointment of Shastri and Bangar, apart from 'resting' fielding coach Trevor Penney and bowling coach Joe Dawes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X