என் வாழ்நாளில் செய்த பெரிய தவறு.. உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல்

மும்பை: தாம் வாழ்நாளில் பெரிய தவறு செய்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Glenn Maxwell உண்மையை சொல்லி மன வருத்தம் | #Cricket

அதிரடி வீரரான மேக்ஸ்வெல், சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய அணியிலிருந்த நீக்கப்பட்டார்.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - 3 ஒருநாள், 5 டி20 போட்டி கொண்ட தொடர்.. அட்டவணை வெளியீடுஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - 3 ஒருநாள், 5 டி20 போட்டி கொண்ட தொடர்.. அட்டவணை வெளியீடு

பிறகு உள்ளூர் போட்டி, பிக் பேஷ் ஆகிய தொடர்களில் விளையாடி மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார்.

மேக்ஸ்வெல் மீதான புகார்

மேக்ஸ்வெல் மீதான புகார்

ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டனாக இருக்கும் தகுதி மேக்ஸ்வெல்க்கு இருந்தும், அவர் அதற்கு பரிசீலினை செய்யப் படவே இல்லை. மேக்ஸ்வெல் தனது திறமைக்கு நியாயம் செய்தது இல்லை என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அந்த வகையில் டிவில்லியர்ஸ் போல் பந்துவீச்சாளர்களுக்கு பயத்தை வரவழைக்க வீரராக மேக்ஸ்வெல் ஆரம்ப கட்டத்தில் திகழ்ந்தார்.

தவறு செய்தேன்

தவறு செய்தேன்

பிறகு மேக்ஸ்வெல் 2 பந்தை அடித்துவிட்டு அவுட்டாகி விடுவார் என்ற பெயர் தான் அவருக்கு கிடைத்தது. இது குறித்து பேசிய மேக்ஸ்வெல், என் வாழ்நாளில் பெரிய தவறாக நான் செய்தது இதை தான். கடந்த காலத்தில் நான் மிகவும் அலட்சியமாக செயல்படுவேன். சில தொடர்களை நான் பெரியதாக நினைத்ததே இல்லை.

மன்னிப்பு

மன்னிப்பு

சில கிரிக்கெட் போட்டிகளுக்கு கடுமையாக உழைத்து, ரன்கள் குவிக்க வேண்டும். ஆனால் நான் அப்படி செய்தது இல்லை. இதனால் பலரும் என் மீது கோபப்பட்டு இருக்கிறார்கள். என் திறமைக்கு நான் நியாயம் செய்யவில்லை. ஆனால் இது தான் வாழ்க்கை. செய்த தவறிலிருந்து திருத்தி கொண்டு, மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்க செல்ல வேண்டும்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

இப்போது நான் என் கிரிக்கெட்டை சிரியசாக எடுத்து கொண்டு உழைக்கிறேன் என்று மேக்ஸ்வெல் கூறினார். மேக்ஸ்வெலின் இந்த பேட்டி, அவர் ஏன் ஆஸ்திரேலிய அணியிலிருந்ந்து கடந்த காலத்தில் நீக்கப்பட்டார் என தெரிகிறது. ஐபிஎல் தொடரிலும் மேக்ஸ்வெல் இது போன்று பல அலட்சியமான முறையில் விளையாடி இருக்கிறார்.2020ஆம் ஆண்டு சீசனில் 108 ரன்களும், 2018 சீசனில் 169 ரன்களும், 2016 சீசனில் 179 ரன்களும், 2015 சீசனில் 145 ரன்கள் மட்டுமே மேக்ஸ்வெல் அடித்திருந்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
RCB Player Glenn Maxwell reveals his biggest mistake in life என் வாழ்நாளில் செய்த பெரிய தவறு.. உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல்
Story first published: Saturday, June 4, 2022, 10:26 [IST]
Other articles published on Jun 4, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X