
புதிய விதி
ஆனால், அனைத்தும் மாறியது, இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட் வந்த உடன். முதலில், இலங்கை வீரர்கள் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும். ஃபிட்டாக இல்லை என்றால் கிரிக்கெட் அணியில் இடம் கிடையாது என்று அறிவித்தார். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம், சிரியசாக செயல்படுத்த தொடங்கியது.

ஐபிஎல் அனுபவம்
ஆத்திரத்தில் வரலாற்றை படைக்க முடியாது. அதற்கு பொறுமை வேண்டும். அப்படி தான், திறமையான வீரர்கள் இருந்தும், போதிய அனுபவம் இல்லாமல் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவே இல்லை. இந்தியா, ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்தாலும், அந்த அணியில் திறமைக்கு பஞ்சமில்லை என தெரியவந்தது. மேலும் ஐபிஎல் தொடரில் ராஜபக்சா, ஹசரங்கா போன்றோர் பெரும் அனுபவத்தை பெற்று வந்தனர்.

வங்கதேசத்துடன் மோதல்
இதனைத் தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் தோல்வி அடைந்ததும், ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர். அதன் பிறகு வங்கதேச அணி பயிற்சியாளர் இலங்கையை குறித்து சொன்ன கருத்து அணிக்குள் சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறியை கொடுத்தது. அதன் பின்னர், அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட தொடங்கினர்.

அதிரடி ஆட்டம்
பயமே இல்லாமல் அடித்து ஆட வேண்டும். விக்கெட்டுகள் விழுந்தாலும் சரி, பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அடித்து ஆட வேண்டும் என்று இலங்கை வீரர்கள் மனதில் தைரியத்துடன் ஒவ்வொரு போட்டியையும் அணுகினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தொடர்ந்து பந்துவீச்சும் எதிர்பார்த்தப் படி கிளிக் ஆக, சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்று கம் பேக் கொடுத்திருக்கிறது.