கோஹ்லியால் வேலை போகல… போட்டுடைக்கிறார் ஸ்ரீனிவாசன்!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

சென்னை: விராட் கோஹ்லியை பரிந்துரை செய்ததால், தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து வெங்சர்கார் நீக்கப்படவில்லை என, பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வெங்சர்கார், விராட் கோஹ்லியை தேர்வு செய்ததால், அணி தேர்வுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறினார்.

reason for Vengsarkar’s removal

2008ல், தேர்வுக் குழுத் தலைவராக தான் இருந்தபோது, விராட் கோஹ்லியை பரிந்துரை செய்ததாகவும், அதற்கு, என். ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வெங்சர்கார் கூறியிருந்தார்.

ஆனால், இதை ஸ்ரீனிவாசன், மறுத்துள்ளார். “வெங்சர்கார் கூறியதில் எந்த உண்மையும் இல்லை. அப்போது அவர் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு பதவியில் இருக்க முடியாது என்று பிசிசிஐ புதிய விதியைக் கொண்டு வந்தது. அதனால்தான், தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்” என்று ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும், விராட் கோஹ்லியை தேர்வு செய்ததில் தான் தலையிடவில்லை என்றும் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

மைதானத்தில் வீரர்கள் விளையாடுவதைவிட, அதற்கு பின்னே நடக்கும் நிர்வாக விளையாட்டுகள் ரொம்ப அதிகமாகவே இருக்கிறது.

Story first published: Saturday, March 10, 2018, 12:10 [IST]
Other articles published on Mar 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற