மும்பை: மகளிர் கிரிக்கெட் டி-20 போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்ற இந்திய மகளிர் அணியின் சாதனை, சில மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி, இங்கிலாந்துடன் நேற்று நடந்த ஆட்டத்தில் விளையாடியது. இதில் முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 198 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ் அரைசதங்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவி செய்தனர்.
மகளிர் டி-20 போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன், 2010ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக, தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு, 205 ரன்கள் குவித்ததே, அதிகபட்ச ஸ்கோராகும்.
இங்கிலாந்து மகளிர் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு, 199 ரன்கள் எடுத்து வென்றது. அத்துடன், அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியாவை, சில மணி நேரங்களில் பின்னுக்கு தள்ளியது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.
கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!