ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை.. மீண்டும் ஒப்பந்தம் செய்த பிசிசிஐ.. ஐபிஎல்லில் களமிறங்குவார்!

Posted By:

டெல்லி: முகமது ஷமி மீதான மேட்ச் பிக்சிங் விசாரணை குறித்த அறிக்கை பிசிசிஐ அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷமி மீண்டும் கிரிக்கெட் விளையாட வசதியாக பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். அதேபோல் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக ஹசின் ஜகான் கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.

ஷமி சூதாட்டம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஷமி மீது போலீசில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

ரத்து செய்யப்பட்டது

ரத்து செய்யப்பட்டது

முகமது ஷமி மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. கொலை முயற்சி, கற்பழிப்பு, சூதாட்டம் ஆகிய பிரிவுகளில் ஷமி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஷமி கைது செய்யப்பட்டால் ஜாமீனில் வர முடியாது. இதனால் அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அவர் பி கிரேட் ஒப்பந்தத்தில் இருந்தார்.

நீரஜ் குமார்

நீரஜ் குமார்

ஷமி மீது சூதாட்ட புகாரும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரை நீரஜ் குமார் என்பவர் விசாரித்து வந்தார். நீரஜ் குமார் பிசிசிஐ அமைத்து இருக்கும் சூதாட்டத்திற்கு எதிரான குழுவின் தலைவர். இவர் நேற்று ஷமி குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.

என்ன தகவல்

என்ன தகவல்

ஆனால் இதில் என்ன விவரம் இருக்கிறது என்று கூறப்படவில்லை. ஷமி மேட்ச் பிக்சிங் செய்து இருக்க மாட்டார் என்று இதில் சில வரிகள் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது ஷமிக்கு ஆதரவான முடிவை பிசிசிஐ அமைப்பு எடுத்து உள்ளது.

பி கிரேட் ஒப்பந்தம்

பி கிரேட் ஒப்பந்தம்

இந்த நிலையில் ஷமி மீண்டும் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது ஷமிக்கு பி கிரேட் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. இவருக்கு இதன் மூலம் 3 கோடி வரை சம்பளம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

இவரது பிசிசிஐ ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாகி இருப்பதால், ஐபிஎல் போட்டியில் விளையாடுவதும் உறுதி ஆகி உள்ளது. அவர் தற்போது டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். நாளையில் இருந்து அவர் டெல்லி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
The Board of Control for Cricket in India (BCCI) on Thursday (March 22) decided to issue Grade B central contract to India pacer Mohammed Shami, who has been tangled in a series of allegations levelled against him by his wife Hasin Jahan.
Story first published: Friday, March 23, 2018, 11:12 [IST]
Other articles published on Mar 23, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற