Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1998ல் செய்ததை 2018ல் இந்திய அணி செய்யுமா?

டெல்லி: இலங்கையில் நடக்கும் முத்தரப்பு நிதாஸ் கோப்பை போட்டியின் பைனல்ஸ்க்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்த நிலையில் 1998ல் நடந்த முதல் நிதாஸ் கோப்பை போட்டியில் செய்ததை இந்த முறையும் இந்திய அணி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி, நிதாஸ் கோப்பை என்ற இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடும் முத்தரப்பு டி-20 போட்டித் தொடர் நடந்து வருகிறது.

இதில் முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்தது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஆட்டம் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் வென்று, இந்திய அணி பைனல்ஸ்க்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் போட்டியின் முடிவில், 18ம் தேதி நடக்கும் பைனல்ஸ்க்கு நுழையப் போவது இலங்கையா, வங்கதேசமா என்பது தெரியும்.

இலங்கையின் சுதந்திர தினம்

இலங்கையின் சுதந்திர தினம்

இலங்கையின் 50வது சுதந்திர தினத்தையொட்டி, 1998ல் முதல் முறையாக நிதாஸ் கோப்பை போட்டி நடந்தது. அதில், இந்தியா, இலங்கையைத் தவிர, நியூசிலாந்தும் பங்கேற்றது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

50 ஓவர்கள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடராக அது அமைந்தது. பைனல்ஸ் போட்டிக்கு இந்தியாவும், இலங்கையும் முன்னேறின. மிகவும் பரபரப்பாகவும் அதிரடியாகவும் அமைந்தது அந்த ஆட்டம். முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.

சச்சின் – கங்குலி சதம்

சச்சின் – கங்குலி சதம்

சச்சின் டெண்டுல்கர் -சவுரவ் கங்குலி ஜோடி, 252 ரன்கள் குவித்து அசத்தியது. சச்சின் இரண்டு சிக்சர், 8 பவுண்டரிகளுடன், 131 பந்துகளில், 128 ரன்கல் குவித்தார். கங்குலி, 136 பந்துகளில், இரண்டு சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார்.

பரபரப்பான கடைசி ஓவர்

பரபரப்பான கடைசி ஓவர்

இலங்கை அணியின் அரவிந்த் டிசில்வா புயல் போல் விளையாடினார். 94 பந்துகளில், 105 ரன்கள் எடுத்து மிரட்டினார். அதே நேரத்தில் மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை. அஜித் அகர்கர், 53 ரன்களுக்கு 4 விக்கெட்டை வீழத்தினார். கடைசி ஓவர், 8 ரன்கள் எடுக்க வேண்டும், ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது என்ற நிலையில், அனில் கும்ப்ளே பந்து வீசினார். அந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதுபோன்ற ஒரு பரபரப்பான வெற்றியை, ரோஹித் சர்மா தலைமையிலான அணி வென்று வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, March 15, 2018, 11:55 [IST]
Other articles published on Mar 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+