நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவரிடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங் வித்தியாசமான கோரிக்கையை வைத்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட், முதற்கட்ட சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். சமீபத்தில் தான் டேராடூனில் இருந்து மும்பையில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு ரிஷப் பண்ட்-ன் கால்களில் தசை நார் கிழிந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் 2 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இன்னும் 4 வாரங்களில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை இருப்பதாக தெரிகிறது.

போட்டி கட்டணத்தில் 60% அபராதம்.. முதல் ODIல் இந்திய அணி தவறு செய்ததாக குற்றச்சாட்டு.. என்ன நடந்தது? போட்டி கட்டணத்தில் 60% அபராதம்.. முதல் ODIல் இந்திய அணி தவறு செய்ததாக குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?

ரிஷப் பண்ட் உடல்நிலை

ரிஷப் பண்ட் உடல்நிலை

தசை நார் கிழிந்துள்ளதால் ரிஷப் பண்ட் பழைய உடற்தகுதிகளை பெற்று, குணமடைந்து வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகிவிடலாம் எனக்கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ரிஷப் பண்ட்-ன் பெயர் இடம்பெற போவதில்லை.

 பாண்டிங்கின் கோரிக்கை

பாண்டிங்கின் கோரிக்கை

இந்நிலையில் பண்ட்-ஐ ஐபிஎல் தொடருக்கு வரும்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங் அழைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்கு தேவை. ஒரு கேப்டனாக அவரின் செயல்பாடுகள், சிரிப்புகள், அணியை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வது போன்றவை கண்டிப்பாக டெல்லி அணிக்கு தேவை.

மார்ச் மாத திட்டம்

மார்ச் மாத திட்டம்

எனவே ரிஷப் பண்ட் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு தயாராகிவிட்டால் போதும், ஐபிஎல் போட்டிகளின் போது டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருக்க வேண்டும். மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லி கேப்பிடல்ஸ் முகாம் தொடங்கப்படும். அப்போது இருந்து அனைத்து நாட்களிலும் ரிஷப் பண்ட், என்னுடம் பயணம் செய்ய விரும்புகிறேன். அவர் இருந்தாலே போதும் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் போது பண்ட்-ம் பணியாற்றினால் அவருக்கு இன்னும் உத்வேகமாக இருக்கும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த கேப்டன் யார்?

அடுத்த கேப்டன் யார்?

ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்பதால் டெல்லி அணியின் அடுத்த கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கேப்டன்சியில் அதிக அனுபவம் கொண்ட வார்னர், ஐபிஎல் தொடரிலும் 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கோப்பையை வென்றுக்கொடுத்தார். பாண்டிங்கும் வார்னர் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதால் அதிக வாய்ப்புள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Delhi capitals Head coach, Ricky ponting's special request to Rishabh pant ahead of IPL 2023, here is the full details
Story first published: Friday, January 20, 2023, 17:30 [IST]
Other articles published on Jan 20, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X