தமிழக வீரருக்கு ரோகித் செம திட்டு.. சாக்கு போக்குல்லாம் சொல்ல கூடாது.. வீரர்களை விமர்சித்த ரோகித்

டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

வங்கதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்து வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றது.

கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பில்டிங் படுமோசமாக இருந்தது.

8 ரன்களில் 5 விக்கெட் இழந்த வங்கதேசம்.. த்ரில் வெற்றி பெற்றது எப்படி.. இந்தியாவுக்கு வில்லனான ராகுல்8 ரன்களில் 5 விக்கெட் இழந்த வங்கதேசம்.. த்ரில் வெற்றி பெற்றது எப்படி.. இந்தியாவுக்கு வில்லனான ராகுல்

 வாசிங்டனுக்கு திட்டு

வாசிங்டனுக்கு திட்டு

இதன் காரணமாக கேப்டன் ரோகித் சர்மாவே களத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.மெஹதி ஹசன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்காமல் வாஷிங்டன் சுந்தர் ஒரே இடத்தில் நின்று விட்டார். இதனை பார்த்ததும் கடுப்பான ரோகித் சர்மா வாஷிங்டன் சுந்தரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது வீடியோவில் பதிவானது. தோல்வி குறித்து பேசிய ரோஹித் சர்மா இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருந்தது என்று கூறினார்.

 நெருக்கடி கொடுத்தோம்

நெருக்கடி கொடுத்தோம்

நாங்கள் 186 ரன்கள் அடித்த பிறகு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியின் அருகே வந்தோம். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. 186 ரன்கள் என்ற இலக்கெல்லாம் போதாது. எனினும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள். முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கடும் நெருக்கடி கொடுத்தார்கள்.

பேட்டிங்கில் குறை

பேட்டிங்கில் குறை

நீங்கள் பார்த்தீர்கள் என்றால் முதல் பந்தில் இருந்து நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் .ஆனால் முதல் 40 ஓவர் வரை எங்களுடைய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள் . கூடுதலாக ரன் எடுத்திருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்போம். ஒரு 25, 30 ரன்கள் குறைந்துவிட்டது .அப்படி இருந்திருந்தால் அது பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக அமைந்திருக்கும்.

சாக்கு போக்கு

சாக்கு போக்கு

நாங்கள் பேட்டிங் செய்யும்போது 50 ஓவரில் 250 ரன்கள் அடிக்க வேண்டும் என முடிவெடுத்தோம்.ஆனால் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டு இருந்ததால் எங்களால் அந்த இலக்கை தொட முடியவில்லை.இது போன்ற ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து எங்கள் அணி வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் .இது போன்ற ஆடுகளத்தில் தான் நம் கிரிக்கெட் பழகி இருப்போம் .ஆடுகளத்தை எல்லாம் ஒரு சாக்காக சொல்லக்கூடாது.

 ஏதுவும் மாறாது

ஏதுவும் மாறாது

இரண்டு பயிற்சி முகாம் மூலம் எங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்ய முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.எங்களிடம் திறமை இருக்கிறது. இருப்பினும் நெருக்கடியான கட்டத்தில் எப்படி அதனை சமாளிக்க வேண்டும் என்பது குறித்து வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த ஆட்டத்தை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம். இரண்டாவது போட்டியில் செய்த தவறை திருத்திக் கொள்வோம் என நம்புகிறேன். இந்த ஆடுகளத்தில் இப்போது எப்படி விளையாட வேண்டும் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது என்று ரோகித் சர்மா கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rohit sharma interview about india loss vs Bangladesh in 1st odi தமிழக வீரருக்கு ரோகித் செம திட்டு.. சாக்கு போக்குல்லாம் சொல்ல கூடாது.. வீரர்களை விமர்சித்த ரோகித்
Story first published: Sunday, December 4, 2022, 20:26 [IST]
Other articles published on Dec 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X