ஏம்ப்பா உங்க நாட்டுக்காரங்க என் பெயரை கெடுக்குறாங்க.. சேவாக்கிடம் சொன்ன நியூசி. வீரர் ரோஸ் டெய்லர்!

Posted By:

கான்பூர்: இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது.

இந்த நிலையில் கான்பூர் மைதானத்துக்கு நேற்று பயிற்சிக்காக வந்த நியூசிலாந்து அணி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய சுவாரசியமான சம்பவங்களும் நடந்து இருக்கின்றன.

இதில் வரவேற்பு அறையில் இருந்த பலகையில் நியூசிலாந்து அணி வீரர் ரோஸ் டெய்லரின் பெயர் தவறாக இருந்ததால், ''உங்க நாட்டின் என் பெயரை எப்படி சொல்லுவாங்க'' என இந்திய வீரர் சேவாக்கிடம் கிண்டலாக கேட்டு இருக்கிறார் டெய்லர்.

 ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

கடந்த ஒருவாரமாக நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி என ஒருநாளில் தொடரில் சமனில் இருக்கிறது. கான்பூரில் நடக்க இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியானது இந்த தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் மிகவும் முக்கியமான போட்டியாக திகழ்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

 கான்பூர் மைதானத்தில் பயிற்சி

கான்பூர் மைதானத்தில் பயிற்சி

இந்த நிலையில் நியூசிலாந்து அணி பயிற்சி மேற்கொள்வதற்காக மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்க இருக்கு கான்பூர் மைதானத்துக்கு வந்தது. அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஹோட்டலில் மிகவும் வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹோட்டல் முழுக்க அலகாரிங்கப்பட்டு அங்கு தீபாவளியே கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவருக்கும் காவி நிறத்தில் துண்டுகளும், உடைகளும் கொடுக்கப்பட்டது வைரலானது.

 தவறாக எழுதப்பட்ட பெயர்

தவறாக எழுதப்பட்ட பெயர்

இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் தங்குவதற்காக அளிக்கப்பட்ட ஹோட்டலின் பெயர் பலகையில் ரோஸ் டெய்லரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அதில் அவரது டெய்லர் என பெயருக்கு பதிலாக டெலர் என்று எழுதப்பட்டு இருந்தது. இதே போன்ற சம்பவம் அவருக்கு ஒவ்வொரு நாடுகளிலும் நடப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவிலேயே இதற்கு முன்பு ஒருமுறை இப்படி நடந்து இருக்கிறது.

 சேவாக்கிடம் இன்ஸ்ட்டாகிராமில் உதவி

சேவாக்கிடம் இன்ஸ்ட்டாகிராமில் உதவி

இதையடுத்து குழப்பம் அடைந்த டெய்லர், இந்திய வீரர் சேவாக்கை இன்ஸ்ட்டாகிராமில் மென்ஷன் செய்து "என்னோட பெயரை ஒவ்வொரு தடவையும் உங்க ஊர்ல தப்பாவே சொல்லுறாங்க. எனக்கு ஒரு உதவி பண்ணுங்க, என்னோட பெயரை உங்க ஊர்ல எப்படி சொல்லுவாங்கன்னு சொல்லி தாங்க'' என்று காமெடியாக எழுதியிருக்கிறார்.

Story first published: Saturday, October 28, 2017, 13:04 [IST]
Other articles published on Oct 28, 2017
Please Wait while comments are loading...