For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கணபதி ஆல் ரவுண்டர் ஆட்டம்.... சேப்பாக்கத்தை வென்றது திருச்சி!

டிஎன்பிஎல் சீசன் 3ல் நடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை அபாரமாக வென்றது ரூபி திருச்சி வாரியர்ஸ்.

சென்னை: திருச்சி அணியின் கணபதி சந்திரசேகர் 5 விக்கெட்கள் எடுத்ததுடன் 5 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அசத்த, சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியை 31 ரன்களில் வென்றது ரூபி திருச்சி வாரியர்ஸ். தொடர்ந்து 2 போட்டிகளிலும் திருச்சி வென்றுள்ளது.

டிஎன்பிஎல் டி-20 போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.

Ruby trichy warriors won against chepauk super gillies in the tnpl

இதில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பரத் சங்கர் 23 ரன்கள், பாபா இந்திரஜித் 53 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த எஸ். அரவிந்த் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய எஸ். சுரேஷ் குமார் 48 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கணபதி சந்திரசேகர் 5 பந்துகளில், 2 பவுண்டரி, 3 சிக்சர் அடித்து, 26 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ், 23 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. கே.எச். கோபிநாத் 11, வி.அருண் குமார் 1, எஸ். கார்த்திக் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். திருச்சியின் கணபதி சந்திரசேகர் இந்த மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார்.

அதற்கடுந்த வந்தவர்களில் பி ராகுல் 53, சசிதேவ் 30 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே சென்னை அணி பெற்றது. இதன் மூலம் 31 ரன்களில் திருச்சி வென்றது.

திருச்சி அணியின் கணபதி சந்திரசேகர் 5 விக்கெட்களையும், விக்னேஷ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். கணபதி சந்திரசேகர் 5 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 5 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ரூபி திருச்சி வாரியர்ஸ் தனது முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்றது. தற்போது 2வது வெற்றியைப் பெற்றுள்ளது.

Story first published: Sunday, July 15, 2018, 7:58 [IST]
Other articles published on Jul 15, 2018
English summary
Ruby trichy warriors wins over chepauk super gillies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X