ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு.. இவங்க யாருன்னு தெரியுமா?

Rupa Gurunath | ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வு-வீடியோ

சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிசிசிஐ நிர்வகிக்கும் மாநில கிரிக்கெட் போர்டுகளிலேயே இவர் தான் முதல் பெண் தலைவர் ஆவார்.

அந்த வகையில் புதுமை படைத்திருக்கும் ரூபா குருநாத் யார்? எப்படி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்?

ரோஹித் சர்மாவிடம் உதவி கேட்டு சரண்டர் ஆன கோலி, ரவி சாஸ்திரி.. காரணம் தோனி.. வெளியான பரபர தகவல்!

இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் மகள்

இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் மகள்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மகள் தான் ரூபா குருநாத். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் சீனிவாசன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பதவிக்கு அவரது மகளும் வந்துள்ளார்.

பிசிசிஐ, ஐசிசி பதவிகள்

சீனிவாசன் முன்னதாக பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி தலைவராக இருந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான சில சர்ச்சைகளுக்குப் பின் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் அமைப்புகளின் பதவிகளை அவர் வகிக்கவில்லை. இந்த நிலையில், அவரது மகள் தலைவர் பதவியை பிடித்துள்ளார்.

தேர்வானது எப்படி?

புதன்கிழமை வரை தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற நிலையில், ரூபா குருநாத் மட்டுமே அந்தப் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் அளித்து இருந்தார். இதை அடுத்து தேர்தல் நாளான இன்று, ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

கணவர் சர்ச்சை

கணவர் சர்ச்சை

ரூபாவின் கணவர் குருநாத் மெய்யப்பன் 2013 ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு ஐபிஎல்-இல் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு புறம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

டிஎன்பிஎல் சர்ச்சை

டிஎன்பிஎல் சர்ச்சை

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கதால் நடத்தப்பட்டு வரும் டிஎன்பிஎல் டி20 தொடரில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது. அது தொடர்பான விசாரணை பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் ரூபா குருநாத் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rupa Gurunath elected as first woman president of Tamilnadu Cricket Association. Rupa was the only person to nominate for the president post.
Story first published: Thursday, September 26, 2019, 16:06 [IST]
Other articles published on Sep 26, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X