For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ அதிரடி ஓகே தான்..ஆனா ஒரு குறை இருக்கே” ரிஷப் பண்ட் குறித்து பாக்.சீனியர் முக்கிய கருத்து- விவரம்

இங்கிலாந்து: ரிஷப் பண்ட் என்னதான் சிறப்பாக விளையாடினாலும், அவரிடம் ஒரு குறை உள்ளதாக பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான 3 வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி முடித்துள்ளது.

ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு வீரர் ஜொலிப்பார் என்பது போன்று, இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் மீண்டும் வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

“இந்திய அணி மூலம் உலகிற்கு செய்தி சொல்வோம்”.. ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. நிகோலஸ் பூரண் எச்சரிக்கை! “இந்திய அணி மூலம் உலகிற்கு செய்தி சொல்வோம்”.. ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. நிகோலஸ் பூரண் எச்சரிக்கை!

பண்ட்-ன் கம்பேக்

பண்ட்-ன் கம்பேக்

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்திய டாப் ஆர்டர் சரிந்த போது கைக்கொடுத்த ரிஷப் பண்ட் 111 பந்துகளில் 145 ரன்களை விளாசினார். எனினும் அப்போட்டியில் இந்திய அணிக்கு தோல்வியே மிஞ்சியது. ஆனால் ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் அவரே நின்று வெற்றி பெற்றுக்கொடுத்தார். இந்திய அணி 72/ 4 என திணறிய போது, 125 ரன்களை அடித்து அசத்தினார்.

விமர்சனங்களுக்கு பதிலடி

விமர்சனங்களுக்கு பதிலடி

சவால் மிகுந்த தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து களங்களில் இந்திய அணி வரலாற்று வெற்றிகளை பெறுவதற்கு முக்கியமான தூணாக பண்ட் விளங்கியுள்ளார். இதன் மூலம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் சரிபட்டு வரமாட்டார் என்ற விமர்சனம் ஓய்ந்துள்ளது.

சோயிப் அக்தரின் பேச்சு

சோயிப் அக்தரின் பேச்சு

இந்நிலையில் என்னதான் பண்ட் சிறப்பாக ஆடினாலும் அவரிடம் ஒரு குறை இருப்பதாக சோயிப் அக்தர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,

ரிஷப் பண்ட்-டிடம் கட் ஷாட், புல் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் என அனைத்து விதமான ஷாட்களும் உள்ளது. அதை விளையாட அவரும் பயப்படுவதில்லை.

சிறிய குறை

சிறிய குறை

அவர் என்னதான் வரலாற்று வெற்றிகளை பெற்றுத் தந்தாலும், அவரின் அதிக உடல் எடையுடன் காணப்படுகிறார். சற்று உடல் எடையை குறைத்தால் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என நினைக்கிறேன். ஏனெனில் இந்திய மார்க்கெட் மிகவும் பெரியது. நட்சத்திர வீரர்கள் மீது இந்தியாவில் முதலீடு அதிகம் இருக்கும். அந்தவகையில் ரிஷப் பண்ட் விளம்பரங்களில் நடித்து கோடிகளில் சம்பாதிக்க முடியும்.

சூப்பர் ஸ்டாராக வருவார்

சூப்பர் ஸ்டாராக வருவார்

பண்ட்-டிடம் உள்ள திறமைக்கு எதிரணிகளுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சூழலை கருத்தில் கொண்டு நிதானமாக விளையாடி அவர், பின்னர் கருணையே காட்டாமல் அதிரடி காட்டினார். எனவே ரிஷப் பண்ட் வருங்காலத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வர வாய்ப்புள்ளது. அவரை தடுப்பதற்கு அவரால் மட்டுமே முடியும் என சோயிப் அக்தர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Story first published: Wednesday, July 20, 2022, 18:28 [IST]
Other articles published on Jul 20, 2022
English summary
Shoaib Akhtar on rishabh pant ( ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து சோயிப் அக்தர் பேச்சு ) ரிஷப் பண்ட் என்னதான் சிறப்பாக விளையாடினாலும், அவரிடம் பெரிய குறை உள்ளதாக சோயிப் அக்தர் அட்வைஸ் கூறியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X