For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவரை இல்லாத பெஸ்ட் வேகப் பந்து வீச்சு நம்முடையது.. சச்சின் பெருமிதம்

மும்பை: தற்போதுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றுள்ள அணியானது பல ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் முழுமையடைந்த இந்திய அணி என்று குறிப்பிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர். பலவகையான வேகப்பந்துச்சாளர்கள் நமது அணியில் இடம் பெற்றுள்ளது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

sachin happy about indian pacers

பிடிஐ செய்தி இணையதளத்திற்கு அளித்த பெட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து சச்சின் கூறுகையில், என்னுடைய மதிப்பீட்டில் நான் கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட அணி இதுவே.

நம்மிடம் மிகச்சிறப்பான ஸ்விங் பந்துவீச்சாளர் (புவனேஷ்வர் குமார்), உயரமான வேகப்பந்து வீச்சாளர் (இஷாந்த் சர்மா), "ஸ்கிட்டி" பந்துவீச்சாளர் (ஜஸ்பிரிட் பும்ரா) மற்றும் தொடர்ந்து வேகமாக வீசக்கூடிய பந்துவீச்சாளர் (உமேஷ் யாதவ்) உள்ளார்கள். இந்த நால்வர் கூட்டணி, விதம் விதமாக பந்துகளை வீசி எதிரணியை வீழ்த்துவர்.

ஹர்டிக் பாண்டியா மற்றும் புவனேஷ்குமார் இருவரின் பேட்டிங் திறமை, அணியை சரியான பாதையில் பயணிக்க வழிவகுக்கும். இவர்கள் இருவரும் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவார்கள்.

ஹர்டிக் தற்போதுதான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் புவனேஸ்வர் குமார் இதற்கு முந்தைய போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளார். தற்போதைய இந்திய அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்கள், நல்ல பேட்டிங் திறமையும் கொண்டிருக்கின்றனர்.

பேட்ஸ்மேன்கள் நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் வீசுவதைக் காட்டிலும், பந்துவீச்சாளர்கள் முக்கியமான நேரங்களில் குவிக்கும் ரன்கள் சிறப்பானது. இதுபோன்ற பங்களிப்பு அணியை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல பெரிது உதவும் என்றார் சச்சின்.

Story first published: Wednesday, June 27, 2018, 19:23 [IST]
Other articles published on Jun 27, 2018
English summary
Sachin has expressed his happiness over the Indian pace attack.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X