For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லாலியில்.. சச்சினுக்கு ஒரு கெளரவம்!

லாலி, ஹரியானா: தனது கடைசி ரஞ்சிப் போட்டியில் கலந்து கொண்டுள்ள சச்சின் டெண்டுல்கருக்கு, ஹரியானா மாநிலம் லாலியில் பாராட்டு விழா நடத்தி கெளரவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கி விட்டார். எல்லா வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று வரும் அவர் தனது டெஸ்ட் ஓய்வையும் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

அதற்கு முன்பாக தனது கடைசி ரஞ்சி சீசனை அவர் ஆடி வருகிறார். மும்பைக்கும், ஹரியானா அணிக்கும் இடையிலான ரஞ்சிப் போட்டியில் தற்போது சச்சின் பங்கேற்றுள்ளார். இதுதான் அவரது கடைசி ரஞ்சிப் போட்டியாகும்.

ரொம்பச் சின்ன ஊர் லாலி...

ரொம்பச் சின்ன ஊர் லாலி...

ஹரியானாவின் லாலி என்ற ஊரில் இந்தப் போட்டி நடக்கிறது. சச்சின் ஆடுவதாலும், இது அவரது கடைசி ரஞ்சிப் போட்டி என்பதாலும் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் லாலியை முற்றுகையிட்டுள்ளனர்.

நினைவுப் பரிசு

நினைவுப் பரிசு

சச்சினுக்கு நேற்று பன்சிலால் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கலந்து கொண்டு நினைவுப் பரிசு வழங்கி சச்சினை கெளரவப்படுத்தினார்.

கை தட்டி வரவேற்பு...

கை தட்டி வரவேற்பு...

சச்சின் விழாவுக்கு வந்தபோது மும்பை, ஹரியானா அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இருபக்கமும் அணிவகுத்து நின்று சச்சினுக்கு கைதட்டி வரவேற்பு அளித்தனர்.

குவிந்த 8000 ரசிகர்கள்

குவிந்த 8000 ரசிகர்கள்

இந்த ஸ்டேடியத்தில் அதிகபட்சம் 8000 பேர் வரை அமரலாம். நேற்று நடந்த நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் குவிந்து விட்டதால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

ஆனால் எடுத்தது 5 ரன்தான்

ஆனால் எடுத்தது 5 ரன்தான்

சச்சினின் கடைசி ரஞ்சிப் போட்டியாக இருந்தாலும் நேற்றைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் சச்சின் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

கபில்தேவ், சேட்டன் சர்மா

கபில்தேவ், சேட்டன் சர்மா

சச்சினுக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சேட்டன் சர்மா, அஜய் ஜடேஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கெஸ்ட்ஹவுஸில் ஒரே கூட்டம்

கெஸ்ட்ஹவுஸில் ஒரே கூட்டம்

சச்சின் டெண்டுல்கர், லாலியில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில்தான் தங்கியுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் எப்போது பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டமாக உள்ளது.

அனேகமாக இந்த கெஸ்ட் ஹவுஸுக்கு ஹரியானா அரசு, சச்சின் பெயர் வைத்தாலும் வைக்கலாம்...

Story first published: Monday, October 28, 2013, 12:17 [IST]
Other articles published on Oct 28, 2013
English summary
Never had a Ranji Trophy season started on a note like it did on Sunday (October 27), with this sleepy hamlet here being woken up from its slumber by the one and only Sachin Tendulkar, a good few hours before the retiring legend was accorded a guard of honour in the area's sole landmark destination. Tendulkar, who had announced his retirement from international cricket after the Test series against the West Indies next month, is here to play in what could be his last Ranji Trophy match for his state side, the opponents being hosts Haryana.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X