For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சானியா, பயஸைப் பார்த்தால் உத்வேகம் வருகிறது.. சிலாகிக்கும் டிராவிட்

பெங்களரு: என்னுடைய உந்து சக்தியாக சானியா மிர்ஸாவும், லியாண்டர் பயஸும் உள்ளனர். அவர்களைப் பார்த்தாலே உத்வேகம் வருகிறது என்று பாராட்டித் தள்ளியுள்ளார் ராகுல் டிராவிட்.

லியாண்டர் பயஸ் இன்னும் இளைஞர் போல டென்னிஸ் களத்தில் புயலைக் கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல இளம் புயலாக இருந்த சானியா மிர்ஸாவும் சமீப காலமாக சர்வதேச களத்தில் கலக்க ஆரம்பித்துள்ளார்.

இருவரும் விம்பிள்டனிலும், இப்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலும் அசத்தலாக சாம்பியன் பட்டங்களைத் தட்டி வந்து இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.

டிராவிட் புகழாரம்

டிராவிட் புகழாரம்

இதுகுறித்து டிராவிட் கூறுகையில், டென்னிஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையினருக்கும் மிகப் பெரிய உந்து சக்தியாக உள்ளனர் பயஸும் சானியாவும்.

மாபெரும் சாதனை

மாபெரும் சாதனை

பயஸும், சானியாவும் செய்து வருவது மிகப் பெரிய சாதனை. இமாலய சாதனையாகும். அமெரிக்க கலப்பு இரட்டையர் பட்டத்தை பயஸ் ஜோடியும், மகளிர் இரட்டையர் பட்டத்தை சானியா ஜோடியும் வென்றிருப்பது மிகப் பெரிய விஷயமாகும்.

சாதனை நாயகன் பயஸ்

சாதனை நாயகன் பயஸ்

பயஸ் தனது 42 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக பட்டங்களை வென்று குவிப்பது பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. மிகப் பெரிய சாதனையாளர் அவர்.

காலத்தைக் கடந்தவர்

காலத்தைக் கடந்தவர்

காலத்தைக் கடந்த சாதனை நாயகராக விளங்குகிறார் பயஸ். தொடர்ந்து அதே ஆக்ரோஷத்துடன் ஆடுகிறார். இந்த ஆண்டில் மட்டும் அவர் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். டெர்ரிபிக் ஆக இருக்கிறார்.

இந்தியனாக மகிழ்ச்சி அடைகிறேன்

இந்தியனாக மகிழ்ச்சி அடைகிறேன்

அவர்களது ஆட்டத்தை நான் டிவியில் பார்த்தேன். ஒரு இந்தியனாக மகிழ்ச்சியான உணர்வைப் பெற்றேன் என்று கூறியுள்ளார் டிராவிட்.

Story first published: Monday, September 14, 2015, 16:19 [IST]
Other articles published on Sep 14, 2015
English summary
Congratulating tennis stars Sania Mirza and Leander Paes, former India captain Rahul Dravid today said that both are "huge inspiration" for aspiring sportspersons in the country. "Both Sania and Leander are huge inspiration for not only tennis aspirants, but also for sportspersons," Dravid told reporters on the margins of announcement of second edition of Bengaluru Cup being organised by Hockey Karnataka here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X