For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே செயலால் ஹீரோ.. என்னா மனுசன்யா சஞ்சு சாம்சன்! ஆட்டத்தில் இருந்த நீக்கப்பட்ட பிறகு செய்த காரியம்

ஹாமில்டன் : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் பிசிசிஐக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபார்மில் இல்லாத ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடியும் அவரை நீக்கியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ஏன் ? ஷிகர் தவான் சொன்ன காரணம்.. அப்போ அவருக்கு அது பொருந்தாதா? சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ஏன் ? ஷிகர் தவான் சொன்ன காரணம்.. அப்போ அவருக்கு அது பொருந்தாதா?

நீக்கப்பட்ட சாம்சன்

நீக்கப்பட்ட சாம்சன்

இதற்கு விளக்கம் அளித்துள்ள தற்காலிக கேப்டன் ஷிகர் தவான், அணியில் 6 பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால் தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு வழங்கி விட்டு சஞ்சு சாம்சனை நீக்கியதாக விளக்கம் அளித்தார். பொதுவாக நாம் எந்தத் தவறும் செய்யாத நிலையில் தண்டனையை அனுபவித்தால் நமது மனசு எப்படி இருக்கும்.

உதவிய சாம்சன்

உதவிய சாம்சன்

ஒன்று கோபம் வரும் மற்றொன்று வாழ்க்கை மீதான நம்பிக்கையே போய்விடும். இன்னொரு நமது குணமே தலைகீழ் மாறிவிடும். ஆனால் சஞ்சு சாம்சன் என்ன செய்தார் தெரியுமா? தமக்கு அநீதி இழைக்கப்பட்ட பிறக்கும் மைதானத்தில் சிரித்துக் கொண்டே இருந்தார். அதோடு மட்டும் நிற்கவில்லைம் மழை விட்டு விட்டு கடுமையாக பெய்து வந்தது .இதனால் மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

இதனைப் பார்த்த சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவும் மைதான ஊழியர்களிடம் சென்று தாங்களும் உங்களுக்கு உதவி செய்வதாக கூறினர். இதனை அடுத்து மழை பெய்யும் போது தார்பாய்களை மூடும் பணியிலும் பிறகு அதனை அகற்றும் பணி என அனைத்தையும் சஞ்சு சாம்சனும் சூரியகுமார் யாதவும் ஈடுபட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நியூசிலாந்து வீரர்களே மழை பெய்யும் போது ட்ரெஸ்ஸிங் ரூம்மை விட்டு வெளியே வராத நிலையில் அந்நாட்டு ஊழியர்களுக்காக இந்திய வீரர்கள் மழையில் நனைந்தபடியே உதவி செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

அடுத்த போட்டி?

அடுத்த போட்டி?

அதுவும் சஞ்சு சாம்சன் தனக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையிலும் ஓடோடி சென்று உதவிய சம்பவம் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு கூடிக் கொண்டு வருகிறது. சஞ்சு சாம்சனும் சூரியகுமார் யாதவும் மைதான ஊழியர்களுக்கு உதவி செய்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் புதன் கிழமை தொடங்குகிறது.

Story first published: Sunday, November 27, 2022, 18:42 [IST]
Other articles published on Nov 27, 2022
English summary
Sanju samson and suryakumar yadav helped groundstaff to cover the field during rainfall ஒரே செயலால் ஹீரோ.. என்னா மனுசன்யா சஞ்சு சாம்சன்! ஆட்டத்தில் இருந்த நீக்கப்பட்ட பிறகு செய்த காரியம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X