For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்.. நியூசி. தொடருக்கான அணி அறிவிப்பு.. சென்னையில் 3 போட்டி

சென்னை: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாத நிலையில், அவர்களுடைய ரசிகர்களுக்கு பிசிசிஐ ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

Recommended Video

Sanju Samson-க்கு ஆதரவாக போராட்டத்தை அறிவித்த ரசிகர்கள் *Cricket

அதாவது நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் டெஸ்ட் போட்டியின் பெரும்பாலான நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாள் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலககோப்பை - இலங்கை அணி அறிவிப்பு..காயமடைந்த வீரர்களுக்கு வாய்ப்பு.. ரிசர்வ் வீரராகிய EX கேப்டன்டி20 உலககோப்பை - இலங்கை அணி அறிவிப்பு..காயமடைந்த வீரர்களுக்கு வாய்ப்பு.. ரிசர்வ் வீரராகிய EX கேப்டன்

எப்போது போட்டி

எப்போது போட்டி

இதில் 3 போட்டிகளும் சென்னையில் வரும் 22, 25 மற்றும் 27ஆம் தேதிகளில் முறையே நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரல் அனுபவமும் இளமையும் கலந்த கலவையான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் குல்தீப் யாதவ், பிரித்வி ஷா, ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், வேகப்பந்துவீச்சாளர் நவதீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டர் ராஜ் பவா

ஆல்ரவுண்டர் ராஜ் பவா

இந்த தொடரில் ஆல்ரவுண்டராக இந்திய அண்டர் 19 உலககோப்பையில் கலக்கிய ராஜ் பவாக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்டர் 19 இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே போன்று அந்த தொடரில் 162 ரன்களை ராஜ் பவா விளாசினார். விஜய் சங்கர், சிவம் துபே ஆகியோர் இருந்தும், இளம் வீரர் ஒருவருக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

ஐபிஎல் வீரர்கள்

ஐபிஎல் வீரர்கள்

அதே போன்று சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், சபாஷ் அகமது, விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று காஷ்மீர் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், ஐபிஎல் வேகம் குல்தீப் சென் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதே போன்று ரஜத் பட்டிதாரும் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

இந்திய ஏ அணி விவரம்

இந்திய ஏ அணி விவரம்

சஞ்சு சாம்சன் (கேப்டன்), பிரித்வி ஷா, அபிமன்யூ ஈஸ்வரன், ருத்துராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் பட்டிதார், கேஎஸ் பரத், குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், நவதீப் சைனி, ராஜ் பவா

Story first published: Friday, September 16, 2022, 20:47 [IST]
Other articles published on Sep 16, 2022
English summary
Sanju Samson is appointed as captain for Ind A vs NZ A odi series இந்திய அணி கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்.. நியூசி. தொடருக்கான அணி அறிவிப்பு.. சென்னையில் 3 போட்டி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X