For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்காட்லாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நிம்மதி பெருமூச்சு விட்டது இங்கிலாந்து!

By Veera Kumar

கிறைஸ்ட்ஸ்சர்ச்: வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இன்று ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து மொயீன் அலியின் சதம் உதவியுடன் 303 ரன்களை குவித்தது.

உலக கோப்பையின், குரூப் ஏ பிரிவிலுள்ள இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் கிறைஸ்ட்ச் சர்ச் மைதானத்தில் இன்று மோதின. டாசில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

World cup 2015: England wins against Scotland

இங்கிலாந்து தொடக்க வீரர் மொயீன் இயான் பெல் 54 ரன்களும், மொயீன் அலி 128 ரன்களும் குவித்து நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் கேரி பேலன்ஸ் 10, ஜோ ரூட் 1 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் கேப்டன் மோர்கன் தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் டைலர் 17, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), 24, கிறிஸ் வோக்ஸ் 1 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 303 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஃபின் 1 ரன்னுடனும், ஸ்டூவவர்ட் பிராட் ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

World cup 2015: England wins against Scotland

30.1 ஓவரில் 172 ரன்களுக்குத்தான் முதல் விக்கெட் வீழ்ந்தபோதிலும், இங்கிலாந்தால் 303 ரன்கள்தான் எடுக்க முடிந்தது.

ஸ்காட்லாந்து தரப்பில் ஜோஸ் தாவே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து பேட்டிங் செய்யும் ஸ்காட்லாந்தின் தொடக்க வீரர் கலம் மேச்லியோட் 4 ரன்களிலும், பிரெட்டி கோல்மேன் 7 ரன்களிலும், மேட் மாச்சன் 5 ரன்களஇலும் அவுட் ஆகினர். ஆண்டர்சன், வோக்ஸ், ஃபின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஸ்காட்லாந்து 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடிவருகிறது. தொடக்க வீரர் கைய்ல் கொய்ட்சர் 49 ரன்களுடனும், கேப்டன் பிரிஸ்டோன் மொம்சன் 6 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பரிதாபமாக தோற்ற இங்கிலாந்துக்கு இது வாழ்வா சாவா போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 23, 2015, 12:50 [IST]
Other articles published on Feb 23, 2015
English summary
Scotland won the toss and put England in to bat in their World Cup Pool A match at Hagley Oval in Christchurch on Monday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X