For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மரணமடைந்த வீரர்களின் பிள்ளைகள் கல்வி செலவை நான் ஏற்கிறேன்.. சேவாக் உதவிக்கரம்!

டெல்லி : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் காஷ்மீர் தாக்குதலில் மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுடைய பிள்ளைகளின் கல்வியை தன் சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி மூலம் முழுவதுமாக கவனித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

சேவாக் இந்த அறிவிப்பை தன் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். சேவாக்கின் இந்த உதவியை, பலரும் வரவேற்று வருகின்றனர்.

மோசமான தாக்குதல்

மோசமான தாக்குதல்

கடந்த வியாழக்கிழமை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மரணமடைந்தனர். முப்பது வருடங்களில் இது போன்ற மோசமான தாக்குதல் சம்பவம் புல்வாமா பகுதியில் நடைபெற்றதில்லை என கூறப்படுகிறது.

அதிர்வலை

அதிர்வலை

இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. மக்கள் பலர் பல்வேறு எதிர்வினை ஆற்றி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்.

கல்வி உதவி

கல்வி உதவி

எது செய்தாலும் அது போதாது, ஆனால், என்னால் முடிந்தது, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் பிள்ளைகளின் கல்வியை சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி மூலம் முழுவதுமாக ஏற்கிறேன் என கூறி இருக்கிறார்.

உதவிக் கரம்

முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனங்களும், வருத்தமும் தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து தற்போது பலரும் தங்கள் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றனர்.

Story first published: Saturday, February 16, 2019, 17:19 [IST]
Other articles published on Feb 16, 2019
English summary
Virender Sehwag step forward to take care of the education of the Pulwama attack martyrs children
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X