மழையா, கதக்களியா? இந்திய வெற்றிக்கு திருவனந்தபுரம் காத்திருக்கிறது

Posted By: Staff

திருவனந்தபுரம்: இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்க உள்ளது. கடைசியாக நடந்த இரண்டு தொடர்களிலும் கடைசி போட்டியிலேயே தொடர் வெற்றிக்கான முடிவு தெரிந்தது. அதுபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது.

நியூசிலாந்து அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

டில்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற, ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி-20ல் நியூசிலாந்து வென்றது. இன்று திருவனந்தபுரத்தில் நடக்கும் மூன்றாவது போட்டியில் வெல்லும் அணியே இந்தத் தொடரை வெல்லும்.

 ராஜ்கோட்டில் முன்ரோ அதிரடி

ராஜ்கோட்டில் முன்ரோ அதிரடி

இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால், போட்டி மிகவும் கடினமாகவே இருக்கும். அதுவும் ராஜ்கோட்டில் கோலின் முன்ரோ, 59 பந்துகளில் 109 ரன்கள் அடித்து, வெற்றியை உறுதி செய்தார். மார்டின் குப்திலும் ரன் குவிப்பில் அவருடன் சேர்ந்து கொண்டார். அந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மோசமாக இருந்தது என்பதைவிட, நியூசிலாந்தின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது என்பதே உண்மை.

முடிவை மாற்றுவாரா கோஹ்லி

முடிவை மாற்றுவாரா கோஹ்லி

ஆறு பவுலர்களுடன் களமிறங்கும் முடிவை இன்றைய போட்டியில் கோஹ்லி மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். தொடரை வெல்வதற்கான வாய்ப்பு என்பதால், இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்பதால், மைதானத்தில் அனல் பறக்கும்.

லீவு போட வேண்டாம்

லீவு போட வேண்டாம்

மழை குறுக்கிடாவிட்டால், மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டியை இன்று கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். இரவு 7 மணிக்கு போட்டி துவங்குகிறது என்பதால் லீவு கூட போட வேண்டிய அவசியமில்லை.

கடைசியில் தொடரை வென்ற இந்தியா

கடைசியில் தொடரை வென்ற இந்தியா

கடந்த ஆண்டு 5 ஒருதினப் போட்டித் தொடரில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. இதில் முதல் போட்டியில் இந்தியா வென்றது. அடுத்தப் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இவ்வாறு நான்கு ஆட்டங்களில் இரு அணிகளும் மாறி மாறி வென்று 2-2 என்ற சமநிலையில் இருந்தது. கடைசி்ப் போட்டியில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியது. அதன்பிறகு, சமீபத்தில் நடந்த ஒருதினப் போட்டித் தொடரிலும் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெல்ல, இரண்டாவது போட்டியில் வென்று இந்தியா சமநிலை செய்தது. தொடரை முடிவு செய்யும் கடைசி ஆட்டத்தில் இந்தியா வென்றது.

முதல் தொடர் வெற்றி வாய்ப்பு

முதல் தொடர் வெற்றி வாய்ப்பு

அதுபோல, தற்போது டி-20 போட்டித் தொடரில், முதல் ஆட்டத்தில் இந்தியாவும் இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வென்றுள்ளன. அதனால் தொடரை முடிவு செய்யும் இன்றைய போட்டியில் வென்று, தொடரை இந்தியா கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம். நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டித் தொடரை இந்தியா இதவரை வென்றதில்லை என்பதால், தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதை விராட் கோஹ்லி அணி வீணடிக்காது என்று எதிர்பார்ப்போம்.

திருவனந்தபுரத்தில் முதல் போட்டி

திருவனந்தபுரத்தில் முதல் போட்டி

திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் போட்டி நடக்கும் 50வது மைதானமாக இது சேர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு மைதானத்தில் கடைசியாக, 1988ல் இந்தியா - வெஸ்ட் இன்டீஸ் தீவுகள் அணிகள் மோதின.

Story first published: Tuesday, November 7, 2017, 18:30 [IST]
Other articles published on Nov 7, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற