For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒட்டுமொத்த அணியும் எதிர்பார்க்க.. ஏமாற்றிய தமிழக வீரர்.. கூப்பிட்டு கண்டித்த கேப்டன் ராகுல் - என்னாச்சு?

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், தமிழக வீரர் ஷாருக் கானின் மோசமான ஃபீல்டிங் காரணமாக, கேப்டன் ராகுல் கோபப்பட்டு அவரை அங்கேயே கண்டித்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.1) நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன.

இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

அட்ரா சக்க.. அதிரடி தமிழக வீரருக்கு மீண்டும் வாய்ப்பு - 5.25 கோடிக்கு இப்போதான் வேலை வந்திருக்குஅட்ரா சக்க.. அதிரடி தமிழக வீரருக்கு மீண்டும் வாய்ப்பு - 5.25 கோடிக்கு இப்போதான் வேலை வந்திருக்கு

 பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனில், ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன் (c), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (w), டிம் சீஃபர்ட், சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், பஞ்சாப் அணியில், KL ராகுல் (w/c), மயங்க் அகர்வால், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 வெறும் 4 வெற்றி

வெறும் 4 வெற்றி

தமிழக வீரர் ஷாருக் கானுக்கு ஒருவழியாக மீண்டும் பஞ்சாப் அணியில் இடம் கிடைத்துள்ளது. 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஷாரூக்கானுக்கு இந்த இரண்டாம் பாதி தொடரில், இப்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிரடி வீரரான ஷாருக் இப்போட்டியில் அசத்த வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், ஷாருக்கானின் மோசமான ஃபீல்டிங் அவருக்கு அவப்பெயரை பெற்றுத் தந்துள்ளது.

 திடீரென பின்வாங்கிய ஷாருக்

திடீரென பின்வாங்கிய ஷாருக்

ஆம்! இப்போட்டியில் நான்காவது ஓவரை முகமது ஷமி வீசினார். அதன், நான்காவது பந்தை எதிர்கொண்ட வெங்கடேஷ் ஐயர், அதனை தேர்ட்மேன் திசையில் தூக்கி அடித்தார். அங்கே ஃபீல்டிங் நின்றுக் கொண்டிருந்தது ஷாருக் கான். பந்து சென்ற வேகத்தை பார்த்த போது, அது நிச்சயம் கேட்ச்சாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஷாரூக்கானும் கேட்ச் பிடிக்கும் முடிவோடு தான் ஓடி வந்தார். ஆனால், என்ன நினைத்தாரா தெரியவில்லை, பட்டென்று பந்தை பிடிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டார்.

 திட்டிய ராகுல்

திட்டிய ராகுல்

இதற்கு காரணம், பந்து அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவரை நோக்கி வராமல், கொஞ்சம் தூரம் முன்னரே லேண்ட் ஆனது. அவர் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால், அதனை கேட்ச்சாக்கி இருக்கலாம். ஆனால், அப்படி முயற்சி செய்து மிஸ்ஸானால், பந்து பவுண்டரிக்கு சென்றுவிடும் என்பதால், அதனை தவிர்க்கும் பொருட்டு, பந்தை ஒரு பிட்சில் கையில் வாங்கினார் ஷாருக். இதனை பார்த்த கேப்டன் லோகேஷ் ராகுல், உடனடியாக ஷாருக்கானை தேர்ட் மேன் திசையில் இருந்து ஃபீல்டிங் மாற்றினார். அதுமட்டுமின்றி, அவரை அருகில் அழைத்த ராகுல், கைத்தட்ட ஏழெட்டு நொடிகளுக்கு அவரிடம் சற்று காட்டமாக பேசிக் கொண்டிருந்தார். பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசாத ஷாருக், அப்படியே ராகுல் சொல்வதை கேட்டுக் கொண்டு அமைதியாகவே நின்று கொண்டிருந்தார்.

 6 போட்டிகளில் தோல்வி

6 போட்டிகளில் தோல்வி

பஞ்சாப் அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் 4 வெற்றிகள் மட்டும் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள கொல்கத்தா 11 போட்டிகளில் 5ல் வெற்றிப் பெற்றுள்ளது. 6ல் தோற்றுள்ளது. எனினும் +0.363 எனும் நல்ல ரன் ரேட்டை கொல்கத்தா வைத்துள்ளது. மூன்றாமிடம் இடத்தில் இருக்கும் பெங்களூரு அணிக்கு கூட இவ்வளவு வலிமையான ரன் ரேட் கிடையாது. இந்நிலையில், பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் பொருட்டு, பஞ்சாப் மற்றும் கொல்கத்தா என இரு அணிகளும் இன்று மல்லுக்கட்டுகின்றன.

Story first published: Friday, October 1, 2021, 22:10 [IST]
Other articles published on Oct 1, 2021
English summary
shahrukh khan missed catch for venkatesh iyer - ஷாருக் கான்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X