For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டேய் கொரோனா! இந்தா வந்துட்டேன்.. கம்பெனி சரக்கை சானிடைசராக மாற்றிய ஷேன் வார்னே.. குவியும் பாராட்டு!

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தன் மதுபானம் தயாரிக்கும் ஆலையில் கொரோனா பரவாமல் இருக்க பலரும் பயன்படுத்தும் சானிடைசர் தயாரித்து வருகிறார்.

குறிப்பாக, இந்த மாற்றத்தை அவர் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்காக செய்து வருகிறார்.

கொரோனாவுக்கு எதிராக உலகமே திரண்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலையில், தன் மதுபான ஆலையை மாற்றி அமைத்து பெரும் உதவி செய்து இருக்கிறார் ஷேன் வார்னே.

கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் தக்குதல் உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மீண்டு வந்தாலும் பலருக்கும் அந்த பாதிப்பு உள்ளது. சுமார் 9000 பேருக்கும் மேல் பலியாகி உள்ளனர்.

கிரிக்கெட் ஸ்தம்பிப்பு

கிரிக்கெட் ஸ்தம்பிப்பு

இதனால் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் கிரிக்கெட் முதன்மை இடத்தில் உள்ளது . கிட்டத்தட்ட ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி கூட தற்போது நடைபெறவில்லை.

ஐபிஎல் தள்ளிவைப்பு

ஐபிஎல் தள்ளிவைப்பு

பிரம்மாண்டமான ஐபிஎல் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் நடக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. கிரிக்கெட் வீரர்கள், வர்ணனை செய்து வரும் முன்னாள் வீரர்கள் என பலரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

ஆஸ்திரேலியா நிலை

ஆஸ்திரேலியா நிலை

ஆஸ்திரேலிய நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்கே இதுவரை 565 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் நிலைமை மோசமாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஷேன் வார்னே முடிவு

ஷேன் வார்னே முடிவு

இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன் ஜின் தயாரிக்கும் மதுபான ஆலையில் சில மாற்றங்களை செய்து, கொரோனா பாதிப்பு பரவாமல் இருக்க, தங்கள் கைககளை சுத்தம் செய்து கொள்ள பலரும் பயன்படுத்தும் சானிடைசர்கள் தயாரித்து வருகிறார்.

70% ஆல்கஹால்

70% ஆல்கஹால்

வார்னேவின் "ஏழு-பூஜ்யம்-எட்டு ஜின்" தயாரிக்கும் ஆலையில் 70 சதவீதம் மருத்துவ அளவு கொண்ட ஆல்கஹால் கொண்ட சானிடைசர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் மருத்துவ பொருட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விலை?

விலை?

இந்த ஆலையில் தயாராகும் சானிடைசர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இரண்டு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும். அதுவும் உற்பத்தி விலைக்கே வழங்கவும் ஷேன் வார்னே முடிவு செய்துள்ளார். இந்த முடிவு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மற்றவர்களும் செய்யலாம்

மற்றவர்களும் செய்யலாம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்னே, மருத்துவ அமைப்புகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் போது நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களும் இதே போல செய்யலாம் என மற்ற மதுபான ஆலைகளுக்கும் யோசனை கூறி உள்ளார்.

பெரிய உதவி

பெரிய உதவி

கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் உற்பத்தித் திறன் குறைந்த ஆஸ்திரேலியா போன்ற சிறிய நாட்டில் ஷேன் வார்னே செய்துள்ள உதவி பெரிதாக பார்க்கப்படுகிறது. அவர் வழியில் மற்றவர்களும் செயல்பட வேண்டும் என ஆஸ்திரேலியர்கள் பலர் கூறி உள்ளனர்.

Story first published: Saturday, March 21, 2020, 9:56 [IST]
Other articles published on Mar 21, 2020
English summary
Shane Warne producing Hand Sanitiser in his gin making distillery. He also encourages others to follow his path.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X