For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கோலி கொடுத்த ஐடியா தான் அது” கடைசி ஓவரில் பிரேஸ்வெல்லை வீழ்த்தியது எப்படி.. ஷர்துல் சுவாரஸ்ய தகவல்

ஐதராபாத்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் மைக்கேல் பிரேஸ்வெல்லை வீழ்த்தியதற்கு விராட் கோலி தான் காரணம் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்து திணறியது. எனினும் மைக்கேல் பிரேஸ்வெல்லின் அட்டகாச சதத்தால் (140) கடைசி ஓவர் வரை வந்து 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

யார் இந்த மைக்கேல் பிராஸ்வெல்.. சூறாவளி போல் சுழன்றது முதல் முறை அல்ல.. தப்பு செய்த ஐபிஎல் அணிகள் யார் இந்த மைக்கேல் பிராஸ்வெல்.. சூறாவளி போல் சுழன்றது முதல் முறை அல்ல.. தப்பு செய்த ஐபிஎல் அணிகள்

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

நியூசிலாந்து அணியில் ஸ்டார் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட்டாக, ஒருகட்டத்தில் 150 ரன்களையாவது எட்டுமா? என்ற சந்தேகம் எழுந்துவிட்டது. அப்போது களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் ஒற்றை ஆளாக நியூசிலாந்து அணியை தூக்கி நிறுத்தினார். 78 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 140 ரன்களை விளாசினார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

பிரேஸ்வெல்லின் ருத்ர தாண்டவத்தால், கடைசி ஓவரில் வெற்றி பெற 20 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. ஆனால் 9 விக்கெட்கள் சென்றிருந்தன. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் கடைசி ஓவரை வீச வந்த ஷர்துல் தாக்கூர் முதல் பந்திலேயே சிக்ஸரை விட்டுக்கொடுத்தார். 2வது பந்து வைடாக சென்றுவிட்டது. இதனால் 5 பந்துகளில் 13 ரன்கள் தேவை என வந்தபோது 3வது பந்தை சாதுர்யமாக யார்க்கர் வீசி எல்.பி.டபள்யூ ஆக்கினார்.

கோலி தந்த யோசனை

கோலி தந்த யோசனை

இந்நிலையில் பிரேஸ்வெல்லை வீழ்த்த விராட் கோலி தான் திட்டம் போட்டுக்கொடுத்தார் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். அதில், கடைசி ஓவரை நான் வீசப்போகிறேன் என்று அறிந்தவுடனே பதற்றப்பட்டேன். அதுவும் முதல் பந்து சிக்ஸருக்கு சென்றவுடன் அழுத்தம் ஏற்பட்டது. அப்போது எனக்கு அருகில் வந்த விராட் கோலி, பிரேஸ்வெல்லை வீழ்த்துவதற்கு ஐடியா தந்தார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

அதில் தொடர்ச்சியாக ஷார்ட் லெந்த் பந்துகளை வீசாதே, யார்க்கர் லெந்தில் வீசு நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என விராட் கோலி கூறியிருந்தார். கோலி கூறியதை போன்றே அடுத்த பந்திலேயே யார்க்கர் வீசினேன், அதற்கு பலனும் கிடைத்தது என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். இதற்காக அவரை லார்ட் ஷர்துல் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 19, 2023, 15:33 [IST]
Other articles published on Jan 19, 2023
English summary
Shardul thakur reveals virat kohli is the reason behind defeat michael bracewell in last over of India vs new zealand 1st ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X