For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க அவுட், வெளியே போங்க.. நான் அவுட் இல்லை... மல்லுக்கட்டி ஜெயித்த தவான்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தவானுக்கு நடுவர் தவறாக அவுட் கொடுத்ததும், உடனடியாக தவான் ரிவ்யூ கேட்டார்.

By Shyamsundar

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மிக முக்கியமான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் 230 இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது. 231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றிபெற்றது. இதன்முலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.

இதில் மிகவும் சிறப்பாக ஆடினார் ஷிகர் தவான். இந்தப்போட்டியில் ஷிகர் தவானுக்கு நடுவர் தவறாக அவுட் கொடுத்ததும், உடனடியாக தவான் ரிவ்யூ கேட்டார். தவானின் இந்த அதிவேகமான செயல் தற்போது வீடியோவாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது .

 சொதப்பிய நியூசிலாந்து அணி

சொதப்பிய நியூசிலாந்து அணி

புனேயில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது . போட்டி ஆரம்பித்ததில் இருந்து நியூசிலாந்து அணி மிகவும் திணறியது. பால் அதிகமாக பவுன்ஸ் ஆனதால் நியூசிலாந்த் வீரர்கள் சரியாக ஆட முடியாமல் திணறினர். களத்திற்கு வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் எந்த பார்ட்னர் ஷிப்பும் நிலையாக அமையவில்லை. இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்தது.

 இந்திய அணி அபார வெற்றி

இந்திய அணி அபார வெற்றி

231 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . ஒருபக்கத்தில் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தாலும் ரன்னும் கூடிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் 231 ரன்கள் என்ற எளிதான ஸ்கோரை நோக்கி விளையாடிய இந்திய அணி 46 வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு மிக எளிதாக வென்றது. இதன்முலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.

 தவானின் அதிரடியான ஆட்டம்

தவானின் அதிரடியான ஆட்டம்

இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ஒரு சமயத்தில் கொஞ்சம் திணறிய போது தவான் மட்டும் அதிரடியாக ஆடினார். நியூசிலாந்தின் பந்துகளை அவர் நாலாதிசைக்கும் பறக்கவிட்டார். மிகவும் சிறப்பாக விளையாடிய தவான் 68 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸ்கள் அடக்கம். தவானின் இந்த ரன் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது.

தவான் கேட்ட ரிவ்யூ

இந்த நிலையில் தவான் 46 ரன்கள் எடுத்திருந்த போது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார். அவர் உடலை திருப்பிய போது பந்து கீப்பரிடம் சென்றது. பந்து பேட்டில் பட்டது போன்ற சத்தம் வந்ததால் நடுவர் விக்கெட் கொடுத்தார். தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு அப்படியே தெரிந்தது . ஆனால் இதை பார்த்தும் தவான் ஒருநிமிடம் கூட யோசிக்காமல் ரிவ்யூ கேட்டார். இதையடுத்து நடுவரின் முடிவு தவறு என அறிவிக்கப்பட்டது. ஒருவேளை அப்போது தவான் வெளியேறி, சரியான பார்ட்னர்ஷிப் அமையாமல் போய் இருந்தால் மொத்த போட்டியே வேறு திசையில் போயிருக்கும்.

Story first published: Monday, October 30, 2017, 12:29 [IST]
Other articles published on Oct 30, 2017
English summary
India won the second ODI match that held in Pune. Indian players Shikar Dhawan's successfull review got viral in social media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X