For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானுக்கு பதிலடி தந்த இலங்கை.. சந்திமால் அபார ஆட்டம்.. 100வது டெஸ்டில் மேத்தியூஸ்க்கு ஏமாற்றம்

காலே: பாகிஸ்தானை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது.

Recommended Video

Virat Kohli கொடுத்த அதிரடி பேட்டி! ரசிகர்கள் உற்சாகம் *Cricket

இதனை அடுத்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இலங்கை அணி இந்த ஆட்டத்தில் களமிறங்கியது.

SL vs Pak 2nd test day 1 - Dinesh chandimal shines in batting

டாஸ் வென்று முதலில் பேக் செய்த இலங்கை அணி தொடக்கம் முதலே அபாரமாக விளையாடியது. பெர்னான்டோ அரை சதமும், கேப்டன் கருணரத்தினே 40 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். குசேல் மெண்டிஸ் எதிர்பாராத விதமாக மூன்று ரன்களில் ரன் அவுட் ஆனார்.

தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மேத்தியூஸ்க்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அபாரமாக விளையாடிய மேத்தியூஸ் 106 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் நட்சத்திர வீரர் தினேஷ் சந்திமால் மற்றும் தனஜெயா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

வீசிய முதல் பந்திலேயே விக்கெட்.. வேறு ஜெர்சியை அணிந்து விளையாடிய இந்திய வீரர்வீசிய முதல் பந்திலேயே விக்கெட்.. வேறு ஜெர்சியை அணிந்து விளையாடிய இந்திய வீரர்

சிறப்பாக விளையாடிய சந்திமால் 80 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். தனஞ்செயா 33 ரன்கள் எடுக்க , விக்கெட் கீப்பர் டெக்வெல்லா 43 பந்துகள் எதிர் கொண்டு 42 ரன்கள் உடன் களத்தில் உள்ளார். இதனை எடுத்து முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி 315 ரன்கள் குவித்து ஆறு விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் முகமது நவாஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் காயம் காரணமாக சயின்ஷா அப்ரிடி களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 24, 2022, 23:25 [IST]
Other articles published on Jul 24, 2022
English summary
SL vs Pak 2nd test day 1 - Dinesh chandimal shines in battingபாகிஸ்தானை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X