For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் மூலமா பலனடையாதவங்க பொறாமையில விமர்சனம் செய்யறாங்க... சுனில் கவாஸ்கர்

மும்பை : ஐபிஎல் போட்டிகள் வரும் மாதம் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில், இந்த தொடர் மூலம் ஏராளமானவர்கள் தங்களது வாழ்வாதாரங்களை பெறுவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2020: Associate sponsor Future Group exits

ஐபிஎல் மூலமாக முக ஓவியம் வரைபவர்கள், டி-சர்ட் விற்பவர்கள், மைதானங்களில் வெளியில் பல்வேறு உணவுப்பொருட்களை விற்பவர்கள் என ஏராளமானோர் வாழ்வாதாரம் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஐபிஎல் மூலமாக எந்த பலனையும் அனுபவிக்காதவர்கள் பொறாமை காரணமாக, அதை குறைகூறி விமர்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

பொண்டாட்டி, புள்ளைங்க கூட வேண்டாம்.. ஆனா இவங்க வேணும்.. 50 பேரை அழைத்துச் செல்லும் ஐபிஎல் அணிகள்!பொண்டாட்டி, புள்ளைங்க கூட வேண்டாம்.. ஆனா இவங்க வேணும்.. 50 பேரை அழைத்துச் செல்லும் ஐபிஎல் அணிகள்!

இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்ததல்ல

இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்ததல்ல

கொரோனாவால் இந்தியா பாதித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் அவசியமானதல்ல என்ற விமர்சனம் பல்வேறு தரப்பினர் சார்பில் முன் வைக்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிகமான பணம் விளையாடுவதாகவும் அது இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்ததல்ல என்றும் அவர்கள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பணத்தை கருத்தில் கொண்டு விமர்சனம்

பணத்தை கருத்தில் கொண்டு விமர்சனம்

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் மூலம் ஏராளமானோர் வாழ்வாதாரங்களை பெற்று வருவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் குறித்த விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பணத்தை மட்டுமே கருத்தில் கொண்டு விமர்சிப்பதாகவும் ஐபிஎல் மூலம் ஏராளமானோர் பலனடைந்து வருவதாகவும், அதன்மூலம் பலனடையாதவர்கள் மட்டுமே பொறாமை காரணமாக இத்தகைய விமர்சனங்களை தெரிவிப்பதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஐபிஎல் மூலம் பல தரப்பினர் பலன்

ஐபிஎல் மூலம் பல தரப்பினர் பலன்

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் முக ஓவியம் வரைபவர்கள், மைதானங்களின் வெளியில் டி-சர்ட், உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் போன்று பல்வேறு தரப்பினர் ஐபிஎல் மூலம் பலனடைந்து வருவதாகவும், முழுமையாக காட்டேஜ் இன்ஸ்ட்ரி ஐபிஎல் மூலம் பலனடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐபிஎல்லை குறிவைத்து விமர்சனம்

ஐபிஎல்லை குறிவைத்து விமர்சனம்

இணையதளம் மூலம் புகழ் அடைய விரும்புவர்கள், ஐபிஎல் போன்ற எளிதான ஒன்றை குறிவைத்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார். ஐபிஎல் இந்திய கிரிக்கெட்டிற்கு நல்லது இல்லை என்று விமர்சனங்களை அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்கள் மட்டும்தான் சிறப்பான இந்திய கிரிக்கெட் குறித்து யோசிப்பார்களா? நாங்கள் அதுகுறித்து யோசிக்க மாட்டோமா என்றும் காட்டத்துடன் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Story first published: Monday, August 24, 2020, 19:18 [IST]
Other articles published on Aug 24, 2020
English summary
Somebody wants to be a little famous on the Internet, then you target the IPL -Gavaskar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X