எல்லாத்தையும் மாத்துறேன்.. இனிமே எங்க மேல புகார் சொல்ல முடியாது.. இந்திய அணிக்கு செக் வைத்த கங்குலி!

Ganguly is taking action to revamp NCA

மும்பை : இந்திய அணி வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு வர தனிப்பட்ட உடற்பயிற்சி நிபுணர்களை நாடி வருகின்றனர்.

அதற்கெனவே பிசிசிஐ நிர்வகித்து வரும் தேசிய கிரிக்கெட் அகாடமியை இந்திய வீரர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து விசாரித்து அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

வித்தியாசமான அணுகுமுறை... தனித்திறமை... கேன் வில்லியம்சன் குறித்து மனம்திறந்த கோலி

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

இனி இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமி குறித்து எந்த புகாரும் கூற முடியாத நிலையை உருவாக்க தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மருத்துவக் குழு, தனி சமூக வலைதள பிரிவு. ஆகியவற்றை உருவாக்க இருக்கிறார் கங்குலி.

தலைவராக ராகுல் டிராவிட்

தலைவராக ராகுல் டிராவிட்

தேசிய கிரிக்கெட் அகாடமி, ராகுல் டிராவிட் தலைமையில் இயங்கி வருகிறது. டிராவிட் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து சில மாதங்கள் மட்டுமே ஆகிறது. அதற்கு முன்பு இருந்தே அந்த அகாடமி மீது இந்திய வீரர்கள் நம்பிக்கை அற்று இருந்தனர்.

உடற்தகுதி பயிற்சி

உடற்தகுதி பயிற்சி

இந்திய அணி வீரர்கள் காயத்தில் இருந்து மீண்ட பின் உடற்தகுதி பெற தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் பயிற்சி பெற வேண்டும். ஆனால், இந்திய வீரர்கள் அங்கே இருக்கும் வசதிக் குறைபாடுகள் மற்றும் சரியான நிபுணர்கள் இல்லாதது ஆகியவற்றால் அங்கே செல்வதை தவிர்த்து வந்தனர்.

மோசமாக்கப்பட்ட காயம்

மோசமாக்கப்பட்ட காயம்

சில இந்திய வீரர்கள் அங்கே சென்ற பின் தங்கள் காயத்தை மோசமாக மாற்றிக் கொண்டனர். அதற்கு உதாரணம், டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா மற்றும் புவனேஸ்வர் குமார்.

பும்ரா, ஹர்திக் பண்டியா

பும்ரா, ஹர்திக் பண்டியா

அந்த அகாடமி மீது நம்பிக்கை இல்லாத பும்ரா மற்றும் ஹர்திக் பண்டியா தனிப்பட்ட முறையில் மருத்துவ சிகிச்சை பெற்றனர். பும்ரா உடற்தகுதி பயிற்சிகள் மேற்கொள்ளவும் அங்கே செல்லவில்லை. தனிப்பட்ட நிபுணரை நியமித்துக் கொண்டார்.

கங்குலி - டிராவிட் சந்திப்பு

கங்குலி - டிராவிட் சந்திப்பு

அது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அகாடமியில் இருக்கும் வசதி குறைபாடுகள் பற்றி பலரும் பேசும் நிலை உருவானது. இந்த நிலையில் தான் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் சந்தித்து பேசினர்.

என்ன முடிவு செய்தனர்?

என்ன முடிவு செய்தனர்?

அதன் முடிவில் தேசிய கிரிக்கெட் அகாடமியை மேலும் வலுப்படுத்த தனி மருத்துவக் குழு, அங்கே வீரர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பயிற்சி குறித்த அறிவிப்புகளை வெளியிட சமூக வலைதள பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

லண்டனில் இருந்து உதவி

லண்டனில் இருந்து உதவி

அதற்கான நடவடிக்கையில் பிசிசிஐ தற்போது இறங்கி உள்ளது. லண்டனில் செயல்படும் பார்ஷூஸ் எனும் சிறப்பு மருத்துவமனையின் உதவியுடன் மருத்துவர் குழு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைதள பிரிவு ஏன்?

சமூக வலைதள பிரிவு ஏன்?

தேசிய கிரிக்கெட் அகாடமி குறித்து கடந்த ஆண்டுகளில் மோசமான செய்திகள் மட்டுமே வெளியாகி வருகிறது. அவர்கள் சார்பாக எந்த விளக்கமும் அளிக்கப்பட்டதில்லை. அது போன்ற நிலையை தவிர்க்கவே சமூக வலைதள பிரிவு உருவாக்கப்பட உள்ளது.

புகார் கூற முடியாது

புகார் கூற முடியாது

இனி இந்திய வீரர்கள் காயம் ஏற்பட்டால் அதில் இருந்து மீண்டு உடற்தகுதி பெற தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தான் வர வேண்டும். அந்த அகாடமி மீது இந்திய அணி வீரர்கள் எந்த புகாரும் கூற முடியாது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Sourav Ganguly is taking strict action to revamp National Cricket Academy
Story first published: Thursday, January 2, 2020, 16:11 [IST]
Other articles published on Jan 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X