For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை

மும்பை : 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்காக தயாராகும் விதமாக இந்திய அணி பல்வேறு ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது. அண்மையில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் இலங்கை மற்றும் நியூசிலாந்தை முழுமையாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

மேலும் ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி

பலவீனமே கிடையாது

பலவீனமே கிடையாது

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்குலி இந்திய அணி ஒருபோதும் பலம் குன்றிய அணியாக இருக்காது. நமது நாட்டில் பல திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் இருப்பதால் நாம் ஒருபோதும் பலவீனமான அணியாக இருக்க மாட்டோம். திறமை வாய்ந்த வீரர்கள் பலருக்கும் அணியில் இடமே கிடைப்பதில்லை. இம்முறை ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா தேர்வு குழுவினர் அனைவரும் ஒரே அணியை உலகக்கோப்பை வரை வைத்து விளையாட வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்.

அதிரடியாக ஆடுங்கள்

அதிரடியாக ஆடுங்கள்

உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா சென்றவுடன் பழைய கதையை எதையும் நினைத்துக் கொண்டு விளையாட கூடாது. ஐசிசி தொடர்களில் இந்தியா பயமின்றி கிரிக்கெட் விளையாட வேண்டும். உங்களுக்கு கோப்பை கிடைக்கிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் அச்சமின்றி விளையாடுங்கள். இந்திய அணியில் சுப்மன் கில் ,ரோகித் சர்மா, விராட் கோலி ,சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா பும்ரா முகமது சாமி ஜடேஜா போன்ற வீரர்களாம் இடம்பெறுவார்கள்.

புதிய பொறுப்பு

புதிய பொறுப்பு

இதனால் இந்தியா ஒரு மோசமான அணியாக இருக்காது என நான் நம்புகிறேன். விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் நம்பியே இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் இருக்கிறது இவ்விரண்டு வீரர்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என நான் நம்புகிறேன்.டெல்லி அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி தாம் வகித்த பல பொறுப்புகளில் இதுவும் ஒரு பொறுப்பாக நான் எடுத்துக் கொள்கிறேன்.

நிரப்புவது கடினம்

நிரப்புவது கடினம்

டெல்லி அணியுடன் இணைந்து செயல்படுவது குறித்து நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். நான் முதல் முறையாக டெல்லி அணியுடன் இணைந்த போது அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ரிஷப் பண்ட் இல்லாதது டெல்லி அணிக்கு மிகப்பெரிய வெற்று இடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை நிரப்புவது கடினம். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அது பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது என்று கங்குலி கூறியுள்ளார்.

Story first published: Sunday, January 29, 2023, 14:38 [IST]
Other articles published on Jan 29, 2023
English summary
Sourav Ganguly says india will win the world cup 2023 இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X