For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீது ராகுல் டிராவிட் செம காட்டம்

By Mathi

டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ரசிகர்களுக்காக, கிரிக்கெட் வீரர்களுக்கானவர்களாக இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சாடியுள்ளார்.

ஐபிஎல் 6வது போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் மூன்று பேர் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கைதாகினர். இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதும் புகார்கள் எழுந்தன. இதனால் அவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

விசாரணைக் குழு விவகாரம்

விசாரணைக் குழு விவகாரம்

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே தன்னிச்சையாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குழுவும் குருநாத் மெய்யப்பனும், குந்த்ராவும் தவறு செய்யவில்லை என தெரிவித்தது.

மும்பை கோர்ட் கண்டனம்

மும்பை கோர்ட் கண்டனம்

இதற்கு மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்த விசாரணைக் குழு சட்டவிரோதமானது என்று சாடியது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.

பொறுப்பு வேண்டும்- டிராவிட்

பொறுப்பு வேண்டும்- டிராவிட்

இந்த நிகழ்வுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், ஊடகங்களில் முதல் பக்கத்தில் இடம்பெறக் கூடியவர்கள் நாம். நமக்கு நிச்சயம் பொறுப்பு இருக்க வேண்டும். பிக்ஸிங் போன்ற சம்பவங்ள் இந்த நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை கடுமையாக பாதிக்கும்.

மக்கள் பார்க்கிறார்கள்..

மக்கள் பார்க்கிறார்கள்..

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் என்பவர்கள் ரசிகர்களுக்காக.. கிரிக்கெட் வீரர்களுக்காக விளையாட்டை நடத்த வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

Story first published: Tuesday, August 6, 2013, 11:38 [IST]
Other articles published on Aug 6, 2013
English summary
Former India captain Rahul Dravid has hit out at the Board of Control for Cricket in India (BCCI), saying administrators are there for the fans and the cricketers to run the game.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X