For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹஸ்ஸிக்கு ஆரஞ்சு... பிராவோவுக்கு பர்ப்பிள் - கெய்ல்தான் சிக்ஸர் மன்னன்!

கொல்கத்தா: 6வது ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர், அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் ஆகிய பெருமைகள் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கிடைத்துள்ளன.

6வது ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. மும்பை இந்தியன்ஸ் பட்டத்தைப் பெற்று முதல் முறையாக சாம்பியனாகியுள்ளது.

இந்தத் தொடர் முழுவதும் அதிரடி ஆட்டங்கள்தான். பெரும்பாலான ஆட்டங்களில் தனி நபர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.

சரி 6வது ஐபிஎல் தொடர் குறித்து ஒரு பார்வை பார்ப்போமா...

76 போட்டிகள்

76 போட்டிகள்

6வது ஐபிஎல் தொடரில் மொத்தம் 76 போட்டிகள் நடைபெற்றன.

மொத்த ரன்கள் 22,541

மொத்த ரன்கள் 22,541

இந்தப் போட்டிகளில் மொத்தம் 22,541 ரன்கள் குவிக்கப்பட்டன.

பவுண்டரிகள் 2051

பவுண்டரிகள் 2051

இந்த ரன்களில் 2051 பவுண்டரிகள் அடக்கம்.

சிக்ஸர்கள் 674

சிக்ஸர்கள் 674

மேலும் 674 சிக்ஸர்களையும் வீரர்கள் விளாசினர்.

அதிக சிக்ஸர் மும்பைக்கே

அதிக சிக்ஸர் மும்பைக்கே

அதிக சிக்ஸர்களை விளாசிய அணி சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்தான். மொத்தம் 117 சிக்ஸர்களை அந்த அணி விளாசியது.

ராஜஸ்தானுக்கு பவுண்டரிகள்

ராஜஸ்தானுக்கு பவுண்டரிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகஅளவிலான பவுண்டரிகளை விளாசியுள்ளது. அதாவது மொத்தமம் 267பவுண்டரிகளை அந்த அணியின் வீரர்கள் விளாசினர்.

வீழ்ந்த விக்கெட்கள் 909

வீழ்ந்த விக்கெட்கள் 909

இந்தப் போட்டிகளில் மொத்தம் 909 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.

4 சதம் - 97 அரை சதம்

4 சதம் - 97 அரை சதம்

இந்தத் தொடரில் மொத்தம் 4 சதங்களே எடுக்கப்பட்டன. அரைசதங்களின் எண்ணிக்கை 97 ஆகும்.

ரன் மெஷின் ஹஸ்ஸி

ரன் மெஷின் ஹஸ்ஸி

அதிக ரன்களைக் குவித்து ஆரஞ்சுத் தொப்பியை சென்னை சூப்பர் கிங்ஸின் மைக் ஹஸ்ஸி பெற்றார். அவர் குவித்த ரன்கள் மொத்தம் 733 ஆகும். 17 போட்டிகளில் அவர் ஆடினார்.

விக்கெட் சிறுத்தை பிராவோ

விக்கெட் சிறுத்தை பிராவோ

அதேபோல அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் சென்னை சூப்பர் கிங்ஸின் பிராவோ ஆவார். இவர் 18 போட்டிகளில் ஆடி 32 விக்கெட்களைச் சாய்த்தார்.

சிக்ஸர் மன்னன் கெய்ல்

சிக்ஸர் மன்னன் கெய்ல்

அதிக அளவிலான சிக்ஸர்களை விளாசியவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல்தான். இவர் 16 போட்டிகளில் ஆடி 61 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

தனி நபர் ரன் குவிப்பிலும் கெய்லே முதலிடம்

தனி நபர் ரன் குவிப்பிலும் கெய்லே முதலிடம்

அதேபோல தனி ஒரு வீரர் அதிக ரன் எடுத்த பெருமையும் கெய்லுக்கே. அவர் ஒரு போட்டியில் மட்டும் 175 ரன்களைக் குவித்தார். புனே வாரியர்ஸுக்கு எதிராக அவர் அடித்து நொறுக்கிக் குவித்த ரன் இது.

அணியின் அதிகபட்ச ரன்

அணியின் அதிகபட்ச ரன்

ஒரு அணியின் அதிகபட்ச ரன்னாக ராயல் சேலஞ்சர்ஸ், புனே வாரியர்ஸுக்கு எதிராக பதிவு செய்த 263 ரன்கள் ஆகும்.

குறைந்த ரன் சென்னைக்கே

குறைந்த ரன் சென்னைக்கே

ஒரு அணியின் குறைந்தபட்ச ரன் குவிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த 79 ரன்கள் பதிவாகியுள்ளது.

Story first published: Monday, May 27, 2013, 12:43 [IST]
Other articles published on May 27, 2013
English summary
IPL 2013 will be better remembered for off-field controversies than on-field exploits of players. Mumbai Indians won the IPL trophy but the tournament might have lost millions of fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X