டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவி-ஷேவாக் ராஜினாமா

Posted By:
Sehwag
டெல்லி: டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியை அதிரடி துவக்க வீரர் விரேந்தர் ஷேவாக் ராஜினாமா செய்துள்ளார்.

டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் போது ஷேவாக்கிற்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து தென் ஆப்ரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் 5 மாதங்களுக்கு பின்னர் நேற்று தான் முதன் முறையாக சண்டிகரில் நடந்த கார்பரேட் கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் தனது டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஏற்றுக்கொண்ட டெல்லி டேர் டெவில்ஸ் அணி, துணை கேப்டனாக இருந்த கௌதம் கம்பீரை கேப்டனாக்கியுள்ளது. துணை கேப்டன் பதவி தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் வீரர்கள் தேர்வில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டிய ஷேவாக், தனது டெல்லி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய போவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 21, 2009, 14:21 [IST]
Other articles published on Sep 21, 2009

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற