For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டார்ச்சருக்கு பயந்து பிக்ஸிங் செய்ததாக ஒப்புக் கொண்டேன்.. உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் அதிரடி

Recommended Video

பிக்ஸிங் செய்ததாக ஏன் ஒப்புக் கொண்டேன்?.. ஸ்ரீசாந்த் அதிரடி- வீடியோ

டெல்லி : இந்திய அணியில் முக்கிய கிரிக்கெட் வீரராக வலம் வந்த ஸ்ரீசாந்த் ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கி பிசிசிஐ-யால் வாழ்நாள் தடை செய்யப்பட்டுள்ளார்.

தன் மீது விதிக்கப்பட்டுள்ள வாழ்நாள் தடையை நீக்கக் கோரி ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். அதன் விசாரணையில் ஸ்ரீசாந்த், தான் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக ஒப்புக் கொண்டதற்கு காரணம் காவல்துறையின் டார்ச்சரில் இருந்து தப்பிக்கவே என கூறி அதிர்வை ஏற்படுத்தி உள்ளார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

கடந்த 2013 ஐபிஎல் தொடரின் போது மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக புகார் எழுந்தது. அவர்கள் மூவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகினர். அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஸ்ரீசாந்த் சிறை தண்டனையில் இருந்து மீண்டார்.

கேரளா உயர்நீதிமன்றத்தில் தோல்வி

கேரளா உயர்நீதிமன்றத்தில் தோல்வி

எனினும், அவர் மீது பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையில் இருந்து மீள முடியவில்லை. கேரளா உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஸ்ரீசாந்த் தொடர்ந்த வழக்கில் தடை நீடிக்கும் என தீர்ப்பு வந்ததால், தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளார் ஸ்ரீசாந்த்.

டார்ச்சருக்கு பயந்தேன்

டார்ச்சருக்கு பயந்தேன்

உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஸ்ரீசாந்த் தான் டெல்லி காவல்துறையிடம் குற்றம் செய்ததாக சிறையில் இருந்த போது ஒப்புக் கொண்டதற்கு காரணம், காவல்துறையின் டார்ச்சருக்கு பயந்து போய் தான் எனக் கூறியுள்ளார்.

ஏன் தெரிவிக்கவில்லை?

ஏன் தெரிவிக்கவில்லை?

அதே சமயம் நீதிபதிகள் பிக்ஸிங் செய்ய ஸ்ரீசாந்தை புக்கி தொடர்பு கொண்டது உண்மை என்றால், அதை ஏன் ஸ்ரீசாந்த் பிசிசிஐ-இடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

வாழ் நாள் தடை எங்குமே இல்லை

வாழ் நாள் தடை எங்குமே இல்லை

உலகில் எந்த வீரரும் ஸ்பாட் பிக்ஸிங் செய்ய புக்கி தொடர்பு கொண்டும், அதை கிரிக்கெட் போர்டுக்கு தெரிவிக்காத குற்றத்துக்காக வாழ் நாள் தடை செயப்படவில்லை என ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் வாதாடினார்.

அசாருதீன் வழக்கு

அசாருதீன் வழக்கு

இந்தியாவில் பிக்ஸிங் புகாரால் வாழ்நாள் தடை செய்யப்பட்ட முகமது அசாருதீன் கடந்த 2012ஆம் வருடம் ஆந்திரா உயர் நீதிமன்றத்தால் அந்த தடையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதையும் குறிப்பிட்டார் அவர்.

Story first published: Thursday, January 31, 2019, 10:16 [IST]
Other articles published on Jan 31, 2019
English summary
Sreesanth told the court that he confessed Spot fixing to escape from police torture
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X