For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதலில் மலிங்கா… இப்போ குலசேகரா..! என்ன நடக்குது இலங்கை அணியில்..! கவலையில் ரசிகர்கள்

Recommended Video

Nuwan Kulasekara Retires : இலங்கை அணியில் மேலும் ஒரு வீரர் ஓய்வை அறிவித்தார்- வீடியோ

கொழும்பு: இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் குலசேகரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் மூத்த வீரரும், யார்க்கர் மன்னருமான லசித் மலிங்கா ஓய்வை அறிவித்துள்ளார். வங்க தேச சுற்று பயணத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்துடன் தாம் ஓய்வு பெற போவதாக அவர் அறிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடருடன் விலகுவதாக அறிவித்த நிலையில், சொந்த மண்ணில் கடைசியாக ஒரு முறை விளையாட முடிவு எடுத்துள்ளார். அவருக்கு பிரியாவிடை வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே தகுதி வாய்ந்த வீரர்கள் இலங்கை அணியில் இல்லாத நிலையில் இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

இந்நிலையில் இலங்கையின் மற்றுமொரு மூத்த வீரரான நுவன் குலசேகரா ஓய்வை இன்று அறிவித்துள்ளார். 2014ம் ஆண்டில் டி 20 கோப்பையை வென்ற இலங்கை அணியில் குலசேகராவும் இருந்தார். 2017க்கு பிறகு அவருக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

199 விக்கெட்டுகள்

199 விக்கெட்டுகள்

இதுவரை 188 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் குலசேகரா, 199 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 21 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். 20 ஓவர் போட்டிகளில் 58 போட்டிகளில் விளையாடி, 66 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

குலசேகரா கைது

குலசேகரா கைது

2016ம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த ஒரு வாகன விபத்தில் குலசேகரா கைது செய்யப்பட்டார். அவர் சென்ற வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததால் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

தோனி அடித்த சிக்சர்

தோனி அடித்த சிக்சர்

2011ம் ஆண்டின் உலக கோப்பை பைனலில், இலங்கை வீரர் நுவன் குலசேகர வீசிய பந்தை தோனி சிக்சர் விளாசி வெற்றி பெற்றதை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ஏற்கனவே இலங்கை அணி புதிய வீரர்களால் தடுமாறி வரும் நிலையில் குல சேகராவின் ஓய்வு அறிவிப்பு மற்றொரு அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு இருக்கிறது.

Story first published: Wednesday, July 24, 2019, 17:59 [IST]
Other articles published on Jul 24, 2019
English summary
Srilankan bowler nuwan kulasekara retires from international cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X