அடேங்கப்பா.. பிசிசிஐ ஒளிபரப்பு உரிமையை ரூ.6138 கோடிக்கு வாங்கியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Posted By:

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி, உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை உலகம் முழுதும் ஒளிபரப்புவதற்கான உரிமையை ரூ.6138.1 கோடிக்கு ஸ்டார் இந்தியா
நிறுவனம் பெற்றுள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்கார கிரிக்கெட் சங்கமாக பிசிசிஐ உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளை உலக முழுவதும் நேரடியாக ஒளிபரப்பும் உரிமை ஏலம் விடப்படுகிறது. அதன்படி, 2018 முதல் 2023 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான ஒளிபரப்பும் உரிமைக்கான ஏலம் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி டிவி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் போட்டியிட்டன.

Star India wins five-year BCCI media rights contract for Rs6,138.1 crore

இதில், 2018 ஏப்ரல் 1 முதல் 2023 மார்ச் 31-ம் தேதிவரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் இந்திய அணி விளையாடும் அனைத்து கிரிக்கெட்
போட்டிக்களை உலகம் முழுதும் டிவியில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. இந்த உரிமையை 6138.1 கோடி ரூபாய்க்கு ஸ்டார்
இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. சோனி டிவி ரூ.6,118.59 கோடிக்கு ஏலம் கேட்டிருந்தது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில், மூன்று வகை கிரிக்கெட்டிலும் 102 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி பார்த்தால்,
ஒரு போட்டிக்கு சராசரியாக 60.1 கோடி ரூபாயை பிசிசிஐக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கொடுக்க உள்ளது. கடந்த, 2012ல் டிவி ஒளிபரப்பு உரிமையை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரூ.3,851 கோடிக்கு எடுத்திருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, தற்போது 59 சதவீதம் கூடுதல் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர ஐபிஎல் கடந்தாண்டு செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடந்தது. அதில் 2018 முதல் 2022 வரை ஐபிஎல்
போட்டியை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தத்தை ரூ. 16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Star India Pvt. Ltd has retained the television broadcast and digital rights for all domestic cricket under the Board of Control for Cricket in India for the next five years at a whopping Rs6,138.1 crore
Story first published: Friday, April 6, 2018, 13:28 [IST]
Other articles published on Apr 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற