For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'டான்' சாதனையை தொட்டுப் பிடித்து முத்தமிட்ட ஸ்டீவ் ஸ்மித்.. 'தேங்க்ஸ்' இந்தியா!

By Veera Kumar

சிட்னி: ஒரே தொடரின் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்ததன் மூலம், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை சக ஆஸ்திரேலியரான ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஜாக் கல்லீசுடன் சேர்ந்து இந்த சாதனையை மூவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. சிட்னியில் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

ஸ்மித் அதிரடி

ஸ்மித் அதிரடி

டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இப்போட்டியில், 117 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்மித் ஏற்கனவே மூன்று டெஸ்டுகளிலும் சதம் அடித்திருந்ததால், இந்த தொடரின் நான்காவது மேட்சில் வந்த நான்காவது சதம் இதுவாகும்.

பிராட்மேன் அபாரம்

பிராட்மேன் அபாரம்

ஒரு டெஸ்ட் தொடரின் அனைத்து மேட்சுகளிலும் சதம் அடித்தவர் என்ற பெருமை மாஜி ஆஸி. வீரர் டான் பிராட்மேனுக்கு உள்ளது. ஆனால் அவர் மூன்று மேட்சுகளில் (மொத்தம் 8 இன்னிங்சுகள்) தொடர்ந்து 4 சதங்கள் அடித்தார். நான்காவது போட்டியில் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை.

தெ.ஆப்பிரிக்க வீரர் கல்லீஸ்

தெ.ஆப்பிரிக்க வீரர் கல்லீஸ்

தென் ஆப்பிரிக்காவின் ஜாக் கல்லீஸ் 2003-04ம் ஆண்டு மேற்கு வங்க அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் நான்கு போட்டிகளிலும் சதம் விளாசியுள்ளார். எனவே பிராட்மேன் மற்றும் கல்லீஸ் சாதனையான நான்கு சதங்கள் என்ற மைல் கல்லை ஸ்மித்தும் எட்டியுள்ளார். இன்னும் ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டிய வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது. எனவே ஸ்மித் ஐந்து சதங்கள் அடித்தால் மேற்கண்ட சாதனைகள் தவிடுபொடியாகிவிடும்.

அசாருதீன், ரிக்கி பாண்டிங்கும் சாதனை

அசாருதீன், ரிக்கி பாண்டிங்கும் சாதனை

இதேபோல, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 3 முறை சதங்கள் அடித்த பெருமை, ரிக்கி பாண்டிங், ராஸ் டெய்லர், மேத்யூ ஹேடன், முகமது யூசுப், சோயிப் முகமது, முகமது அசாருதீன் மற்றும் கென் பார்ரிங்டன் ஆகிய 7 பேட்ஸ்மேன்களுக்கு உள்ளது.

ஸ்மித் கடந்த பாதை

ஸ்மித் கடந்த பாதை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அடிலெய்டில் 162 ரன்களுடன் அவுட் ஆகாமலும், பிரிஸ்பேனில் 133 ரன்களும், மெல்பர்னில் 192 ரன்களும் எடுத்தவர் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 7, 2015, 12:45 [IST]
Other articles published on Jan 7, 2015
English summary
Australia captain Steve Smith hit his 4th century of the series against India to match Sir Don Bradman and Jacques Kallis' records. Smith has now scored a hundred in each match of the current four-Test series against India. Today, the right-hander made 117 to equal Bradman and Kallis.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X