For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? கவாஸ்கர் சொன்ன ஷாக் பதில்

டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட், கடைசி நேரத்தில் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன் காரணமாக, கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். தமக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக பேட்டிங்கில் ராகுல் செயல்பட்டார்.

எனினும் முக்கியமான கேட்ச் ஒன்றை கையில் உறை போட்டும் தவறவிட்டார். இதனால் இந்திய அணி தோல்வியை தழுவியது.

வாழ்வா? சாவா? கட்டத்தில் இந்தியா.. தொடரை வெல்ல வங்கதேசம் தீவிரம்.. தப்பிக்குமா ரோகித் படை வாழ்வா? சாவா? கட்டத்தில் இந்தியா.. தொடரை வெல்ல வங்கதேசம் தீவிரம்.. தப்பிக்குமா ரோகித் படை

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

இது குறித்து பேசியுள்ள கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் , இந்திய அணியில் தவான் அல்லது ரோஹித் சர்மாஇல்லாத நேரத்தில் தொடக்க வீரராக கே எல் ராகுல் களம் இறங்கி விளையாடி வருகிறார். நடுவரிசையில் விளையாட சொன்னாலும், கே எல் ராகுல் அசத்துகிறார். இதனால் ராகுல் நடுவரிசையில் இந்திய அணியில் தொடர வேண்டும்.

 வசதி ஏற்படும்

வசதி ஏற்படும்

மேலும் , கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டால் , கேப்டன் ரோகித் சர்மா கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை பிளேயிங் லெவனில் சேர்த்துக் கொள்ளும் வசதி ஏற்படும். இதனால் கே எல் ராகுல் தான் உண்மையான ஆல் ரவுண்டர் என்று நான் சொல்வேன். இனி கே எல் ராகுலை பினிஷர் ரோலில் பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும். இதனால் பண்டை விட, கேஎல் ராகுல் தான் அணியில் இடம்பெற வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

இவங்க வேண்டாமா?

இவங்க வேண்டாமா?

எனினும், கவாஸ்கரின் இந்த கருத்து சரியாக இருந்தாலும், ஃபினிஷர் ரோலுக்கு சஞ்சு சாம்சனை பயன்படுத்லாம். கங்குலி காலத்தில் போதிய விக்கெட் கீப்பர் இல்லை என்பதால் டிராவிட் செயல்பட்டார். ஆனால் தற்போது சஞ்சு சாம்சன், இணான் கிஷன் போன்ற வீரர் இருக்கும் போது, ஏன் ராகுலுக்கு கூடுதல் பெறுப்பு வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

ரசிகர்களின் கூற்று

ரசிகர்களின் கூற்று

நேற்று பேசிய கவாஸ்கர், இந்திய அணியின் தொடக்க வீரராக ணிகர் தவான் தொடர வேண்டும் என்று கூறினார். அப்படி அவருடைய கூற்றின் படி பார்த்தால் இஷான் கிஷன் அல்லது சேஞ்சு சாம்சன் என்ற விக்கெட் கீப்பக்ளை தொடக்க வீரராக பயன்படுத்தி, கூடுதலாக ஒரு பந்தவீச்சாளர்களை பயன்படுத்தலாம் அல்லவா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Tuesday, December 6, 2022, 23:52 [IST]
Other articles published on Dec 6, 2022
English summary
Sunil Gavaskar asks rohit sharma to pick kl rahul as wicket keeper உலக கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? கவாஸ்கர் சொன்ன ஷாக் பதில்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X