“இங்கிலாந்தை பார்த்து கத்துக்கோங்க”.. தினேஷ் கார்த்திக்-ஐ ஒதுக்கும் ரோகித்.. கவாஸ்கர் கடும் கோபம்!

நாக்பூர்: இங்கிலாந்து அணியை பார்த்தாவது ரோகித் சர்மா மாற வேண்டும் என கவாஸ்கர் காட்டமாக கூறியுள்ளார்.

Recommended Video

இந்திய Playing 11-ல் Umesh Yadav வந்தது எதன் அடிப்படையில்? Sunil Gavaskar கேள்வி *Cricket

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை இரவு நாக்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்பதால் இந்திய அணி வாழ்வா? சாவா கட்டத்தில் உள்ளது.

3 மிகப்பெரும் தவறுகள்.. ஐதராபாத்தில் ஏற்பட்ட கோர சம்பவம்.. எப்படி நடந்தது இந்த போலீஸ் தடியடி??3 மிகப்பெரும் தவறுகள்.. ஐதராபாத்தில் ஏற்பட்ட கோர சம்பவம்.. எப்படி நடந்தது இந்த போலீஸ் தடியடி??

தீரா பிரச்சினை

தீரா பிரச்சினை

எனவே கடந்த முறை செய்த தவறுகளை இந்த போட்டியில் செய்யக்கூடாது என ஆலோசிக்கப்பட்டது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று தினேஷ் கார்த்திக்கின் இடம் தான். ரிஷப் பண்ட்-க்கு மாற்றாக களமிறக்கப்பட்ட அவர் சரியான இடத்தில்

விளையாடவில்லை. இந்திய அணி 123 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்த போதும், அவருக்கு முன்னதாக அக்‌ஷர் பட்டேல் தான் களமிறக்கப்பட்டார்.

காரணம் என்ன

காரணம் என்ன

தினேஷ் கார்த்திக் 17வது ஓவரில் தான் வாய்ப்பு பெற்றார். இதன் விளைவு அக்‌ஷர் பட்டேல் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே 6 ரன்களை மட்டுமே எடுத்தனர். ஒரு முழுமையான பேட்ஸ்மேன் இருக்கையில் ஆல்ரவுண்டர் களமிறங்கியது அதிருப்தியை கிளப்பியது. மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்ற திட்டத்தால், அக்‌ஷரை மேலே களமிறக்கினர்.

கோபமடைந்த கவாஸ்கர்

கோபமடைந்த கவாஸ்கர்

இந்நிலையில் இதற்கு கவாஸ்கர் கோபமடைந்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், அக்‌ஷர் பட்டேலை விட தினேஷ் கார்த்திக் சிறந்த பேட்ஸ்மேன் என நீங்கள் நினைத்தால், 12 - 13 ஓவர்களில் கூட அவர் விளையாட வேண்டும். கடைசி 3-4 ஓவர்கள் தான் ஆட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள். ஒரே ஒரு கோட்பாட்டை ( Theory ) ஐ மட்டுமே நம்பக்கூடாது.

இங்கிலாந்து அணியின் திட்டம்

இங்கிலாந்து அணியின் திட்டம்

இங்கிலாந்து அணி எந்தவித கோட்பாடுகளையும் ஏற்காமல் சுதந்திரமாக விளையாடுகிறார்கள். இதனால் அவர்களின் ஆட்டத்தில் உள்ள சிறப்பு மற்றும் முடிவுகளை பாருங்கள். எனவே கோட்பாடு என்ற குழிக்குள் இந்திய அணி விழாமல், சூழலுக்கு ஏற்ப எப்படிப்பட்ட முடிவுகளையும் துணிந்து எடுக்க வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sunil gavaskar furious on Rohit sharma over Dinesh karthik's place in India playing 11
Story first published: Thursday, September 22, 2022, 18:25 [IST]
Other articles published on Sep 22, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X