For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுரேஷ் ரெய்னாவுக்கு தமிழகத்தில் கிடைத்த கவுரவம்.. அதுவும் கவர்னரின் கையால்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு தமிழகத்தில் இருந்து புதிய கவுரவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா.

கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது எந்தவித கிரிக்கெட்டிலும் ஈடுபடாமல் இருக்கிறார்.

Suresh raina

தோனியின் மீதான நட்பு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீடித்து வந்த சுரேஷ் ரெய்னா, கடந்தாண்டு அந்த அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனையடுத்து தற்போது வர்ணனையாளர் அவதாரம் எடுத்ததோடு, அடுத்த ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இவரின் கம்பேக்கை எதிர்நோக்கி ரசிகர்களும் காத்துள்ளனர்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு தற்போது புதிய கவுரவம் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக இன்று நடத்தப்பட்ட விழாவில் அவர் நேரில் கலந்துக்கொண்டு கவுரவத்தை ஏற்றுக்கொண்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக எனக்கு வழங்கப்பட்ட பட்டத்தால் பெரும் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் உள்ளேன். சென்னை எனது இல்லம், அங்கிருந்து எப்போதுமே எனக்கான பாசம் கிடைக்கும். மிகவும் பாசத்தோடு என்னை வரவேற்ற சென்னை மக்களுக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, August 5, 2022, 16:11 [IST]
Other articles published on Aug 5, 2022
English summary
Suresh Raina received a honorable doctorate from Vels University.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X