For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் விளையாடிய அனைத்து டி20 தொடரிலும் இந்திய அணி வெற்றிவாகை சூடி இருக்கிறது.

இந்த நிலையில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 234 ரன்கள் குவித்தது. இதில் சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்கள் விளாசினார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்

சூர்யகுமார் வெறித்தனம்

சூர்யகுமார் வெறித்தனம்

இதில் ஏழு சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும். இந்த போட்டியில் சூரியகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 13 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். நிலைமை இப்படி இருக்க நேற்று இந்திய அணி வெற்றி பெற்றதற்கு சுப்மன் கில்லை விட சூரியகுமார் தான் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நேற்று நியூசிலாந்த அணி பேட்டிங் செய்யும்போது பனிப்பொழிவு கடுமையாக இருந்தது.

தடுத்த சூர்யகுமார்

தடுத்த சூர்யகுமார்

ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி இருந்தால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. குறிப்பாக அந்த அணியின் பின் ஆலன், இங்கிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் மாஸ் காட்டக் கூடியவர்கள். நேற்று அவர்கள் மட்டும் ஒரு நல்ல தொடக்கத்தை அளித்திருந்தால் நிச்சயம் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றிருக்கும். ஆனால் கேட்ச் ஆட்டத்தின் முடிவையே மாற்றும் என்று சொல்வார்கள்.

அபார கேட்ச்

அபார கேட்ச்

அதற்கு ஏற்றார் போல் நேற்று சூர்யகுமார் யாதவ் இரண்டு அபார கேட்சை பிடித்து அசத்தினார். குறிப்பாக பவர் பிளேவில் பின் ஆலன் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் பேட்டை கன்னா பின்னா என்று சுற்றினார்கள். இதில் பின் ஆலன் அடித்த பந்து ஸ்லிப்பில் பறந்து சென்ற போது அது பவுண்டரிக்கு செல்லும் என எதிர்பார்த்த நிலையில் சூரியகுமார் யாதவ் பாய்ந்து அதனை கேட்ச் ஆக பிடித்தார். இதனால் பில் ஆலன் மூன்று ரன்களின் வெளியேறினார்.

சரிந்த நியூசிலாந்து

சரிந்த நியூசிலாந்து

இதேபோன்று கிளன் பிலிப்ஸும் ஹர்திக் பாண்டியா பந்தை விளாச அது ஸ்லிப்பை நோக்கி பறந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ், அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார். இந்த இரண்டு கேட்ச்சும் ஒரே மாதிரி ரீப்ளே போல் அமைந்தது. இந்த தொடக்கத்தை நியூசிலாந்து வீரர்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் அந்த அணி வீரர்கள் அப்படியே சுருண்டு 66-ரன்களில் ஆட்டம் இழந்தது..

Story first published: Thursday, February 2, 2023, 13:57 [IST]
Other articles published on Feb 2, 2023
English summary
Suryakumar yadav two brilliant catch change the game in favour of ind
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X