18 லட்சம்.. தெரியாம நடந்து போச்சு.. அதுக்கு இவ்ளோ அபராதமா? ஆஸி. கிரிக்கெட்டில் நடந்த கேலிக்கூத்து!

சிட்னி : ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் ஒரு போட்டியில் பட்டியலிலேயே இல்லாத ஒரு வீராங்கனையை போட்டியில் களமிறக்கியது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.

பின் அந்த அணியே தவறை உணர்ந்து தொடர் நிர்வாகத்திடம் தங்கள் தவறை சுட்டிக் காட்டியது.

ஆனாலும், அந்த அணிக்கு 18.5 லட்சம் அபராதம் விதித்து இருக்கிறது பிக் பாஷ் லீக் நிர்வாகம். இந்த தவறால் கிரிக்கெட்டில் பெரிய நாடாக கருதப்படும் ஆஸ்திரேலியா கேலிப் பொருளாக மாறி உள்ளது.

ஆஸி.வின் ஐபிஎல்

ஆஸி.வின் ஐபிஎல்

ஐபிஎல் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் நடைபெற்று வருகிறது. ஆடவர் கிரிக்கெட் மட்டுமின்றி, மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து மகளிர் பிக் பாஷ் லீக் தொடரும் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை அன்று சிட்னி சிக்ஸர்ஸ் - மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணிகளுக்கு இடையே மோதல் நடைபெற்றது.

சிட்னி சிக்ஸர்ஸ் செய்த தவறு

சிட்னி சிக்ஸர்ஸ் செய்த தவறு

இந்தப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஹெய்லே சில்வர் ஹோல்ம்ஸ் என்ற வேகப் பந்துவீச்சாளர் பெயர் இடம் பெற்று இருந்தது. அவர் காயம் காரணமாக சில போட்டிகளுக்கு முன் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

சுதாரித்த அணி

சுதாரித்த அணி

அவரை அதிகாரப்பூர்வமாக அணியில் சேர்க்க சிட்னி சிக்ஸர்ஸ் ஒப்புதல் பெறாத நிலையில் அவரை மெல்போர்ன் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கியது. பின்னர் அந்த அணி சுதாரித்தது. போட்டி துவங்கிய சில நிமிடங்களில் அந்த அணி இந்த தவறை தானே ஒப்புக் கொண்டது.

18 லட்சம் அபராதம்

18 லட்சம் அபராதம்

பின்னர் ஹெய்லேவை அந்த அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எதிலும் பயன்படுத்தவில்லை. எனினும், அந்த தவறால் அந்த அணிக்கு 18.5 லட்சம் (50000 அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டது. தானே தவறை கூறியதால் அதில் 11 லட்சத்தை 12 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் கருணை காட்டியது தொடர் நிர்வாகம்.

போட்டியில் தோல்வி

போட்டியில் தோல்வி

அந்தப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 166 ரன்கள் குவித்தது., அடுத்து பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிட்னி அணி தோல்வி அடைந்ததால் பெரிய அளவில் அபாரதம் விதிக்கப்படுவதில் இருந்து தப்பித்தது.

கேலி

கேலி

கிரிக்கெட்டில் முதன்மை நாடான ஆஸ்திரேலியாவிலேயே இது போன்ற தவறுகள் நடப்பது ரசிகர்கள் மத்தியில் கேலிக்குரிய விஷயமாக மாறி உள்ளது. பிக் பாஷ் லீக் தொடரை பெரிய அளவில் பிராண்டிங் செய்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இது அதிர்ச்சி சம்பவமாகவும் அமைந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
Read more about: bbl 2020
English summary
Sydney Sixers fined for $15000 for huge breach of rules.
Story first published: Sunday, November 22, 2020, 18:10 [IST]
Other articles published on Nov 22, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X