For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணி பேட்டைவிட கோஹ்லி பேட் விலை ரூ.2 கோடி அதிகம்!

By Veera Kumar

மும்பை: விராட் கோஹ்லியின் பேட்டில் இருந்து புறப்படும் பந்துகள் மட்டும் ஸ்கோர் செய்யவில்லை, அந்த பேட்டும் அதிக பணத்தை ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறதாம்.

நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் டோணியின் பேட்டைவிட, டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் பேட்டுக்குத்தான் மார்க்கெட்டில் மவுசு அதிகம்.

பேட்டில் ஒட்டப்படும் விளம்பர ஸ்டிக்கர்களுக்கு கிடைக்கும் பணத்தை வைத்துதான் இந்த மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

ஸ்டிக்கர் பாய்ஸ்

ஸ்டிக்கர் பாய்ஸ்

டோணி தனது பேட்டில் ஸ்பார்டன் (Spartan) என்ற ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார். இதற்காக டோணிக்கு ரூ.6 கோடி கட்டணத்தை அந்த நிறுவனம் வழங்கி வருகிரது.

ரூ.8 கோடி கட்டணம்

ரூ.8 கோடி கட்டணம்

கோஹ்லி தனது பேட்டில் எம்.ஆர்.எப் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார். இதற்காக கோஹ்லிக்கு கட்டணமாக ரூ.8 கோடி வழங்கப்படுகிறது.

ரன்னும் அதிகம்

ரன்னும் அதிகம்

டோணியின் பேட்டைவிட கோஹ்லி பேட் ரூ.2 கோடி அதிகமாக சம்பாதிக்கிறது என்பதுதான் இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது. சமீபகாலமாக கோஹ்லி விளாசும் ரன்னும் டோணியைவிட அதிகம்தான்.

சச்சின் பயன்படுத்தினாரு

சச்சின் பயன்படுத்தினாரு

எம்.ஆர்.எப் ஸ்டிக்கர் கொண்ட பேட்டை வெகுநாட்களாக பயன்படுத்தி வந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், பின்னர் அடிடாஸ் நிறுவனத்தின் ஸ்டிக்கரை பயன்படுத்தி வந்தார்.

இரண்டாம் கட்ட வீரர்கள்

இரண்டாம் கட்ட வீரர்கள்

சுரேஷ் ரெய்னா, மற்றும் ரோகித் ஷர்மா இருவரும் சியட் நிறுவன ஸ்டிக்கர்களை பேட்டில் பயன்படுத்துகிறார்கள். இதற்காக இருவருக்கும் சுமார் ரூ.3 கோடி கட்டணமாக கிடைக்கிறது. அஜிங்ய ரஹானே பயன்படுத்தும் ரேக்ஸ் ஸ்டிக்கருக்காக அவருக்கு ரூ.1.5 கோடி கிடைக்கிறது.

பெயரை கெடுக்கும் தவான்

பெயரை கெடுக்கும் தவான்

சச்சின், கோஹ்லி பயன்படுத்தும் எம்.ஆர்.எப் பேட்டின் மதிப்பை குலைக்கும் ஒரு வீரர் என்றால் அது ஷிகர் தவான்தான். எப்போதும் சொதப்பி, ஏதோ ஒரு போட்டியில் மட்டும் ஆடும் தவானுக்கு, எம்.ஆர்.எப் ரூ.3 கோடி வழங்கி வருகிறதாம்.

அண்ணே ஒரு விளம்பரம்..

அண்ணே ஒரு விளம்பரம்..

அதேநேரம், விளம்பர வருவாயை பொறுத்தளவில், இன்னும் கோஹ்லியைவிட, டோணிதான் முதலிடத்தில் இருந்து வருகிறார்., ஷூ, விளையாட்டு உபகரணங்கள் என பல நிறுவனங்களும் போட்டி போட்டு டோணியை விளம்பரத்திற்கு பயன்படுத்தி வருகின்றன.

Story first published: Monday, March 21, 2016, 13:57 [IST]
Other articles published on Mar 21, 2016
English summary
India's ODI and T20 cricket captain M S Dhoni continues to be one of the highest paid brand endorsers in the country. But when it comes to peddling the willow, red hot Virat Kohli commands a higher price.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X