For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எதே... ஜுராஸிக்கா!!.. ஜேசன் ராய்-ஐ புகழ ஐசிசி செய்த குறும்புத்தனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அமீரகம்: ஜேசன் ராய்-ன் ஆட்டத்தை பாராட்ட ஐசிசி மேற்கொண்ட புதிய முயற்சி ரசிகர்களுக்கு வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை வெளுத்துவாங்கியது இங்கிலாந்து அணி.

இந்தியா டீம்ல இவங்க 3 பேர தூக்கிட்டு.. அவங்கள கொண்டு வாங்க.. இல்லைனா மூட்ட கட்ட வேண்டியது தான்இந்தியா டீம்ல இவங்க 3 பேர தூக்கிட்டு.. அவங்கள கொண்டு வாங்க.. இல்லைனா மூட்ட கட்ட வேண்டியது தான்

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மைதானத்தில் சூழலில் பவுலிங் செய்த அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் தில்லாக பேட்டிங் எடுத்தது.

அடிவாங்கிய வங்கதேசம்

அடிவாங்கிய வங்கதேசம்

டாஸ் வென்றும் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது வங்கதேசம். ஓப்பனிங் வீரர்கள் லின்டன் தாஸ் (9), நைம் (5) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த எந்தவீரரும் பெரியளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக முஸ்ஃபிகூர் ரஹீம் 29 ரன்கள் அடிக்க 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

Recommended Video

Virat Kohli is a man not a machine, let him do what he does - Jonty Rhodes| Oneindia Tamil
ராயின் அதிரடி ஆட்டம்

ராயின் அதிரடி ஆட்டம்

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய்-யே ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். ஜாஸ் பட்லர் (18), டேவிட் மாலன் (28) என அடுத்தடுத்து வெளியேற, மறுமுணையில் தூணாக நின்ற ஜேசன் ராய் 38 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார். இதனால் இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியது.

வைரல் வீடியோ

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமான ஜேசன் ராய்-ஐ அனைவரும் புகழ்ந்தனர். குறிப்பாக ஐசிசி பாராட்டி வெளியிட்டுள்ள வீடியோவின் விதம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மெஹ்டி ஹாசன் வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரின் 3வது பந்தை ஜேசன் ராய் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அவர் சிக்ஸர் அடிப்பதற்கு முன்னர் அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் டைனோசரஸ் பொம்மை மீது அமர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். அதன்பிறகு தான் சிக்ஸர் பறந்தது. எனவே அதற்கு ஜுராசிக் சிக்ஸர் என பெயர் வைத்து பாராட்டியுள்ளது.

தொடர்ந்து வெற்றி

தொடர்ந்து வெற்றி

ஐசிசி-ன் இந்த குறும்புத்தனமான பதிவு ரசிகர்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் 2வது வெற்றி இதுவாகும் எனவே குரூப் 'ஏ' வில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதே போல வங்கதேசம் அணி தொடர்ந்து 2 தோல்விகளை பெற்று கடைசி இடத்திற்கு சென்றது.

Story first published: Friday, October 29, 2021, 11:23 [IST]
Other articles published on Oct 29, 2021
English summary
ICC put a crazy caption for Jason roys six against bangladesh in T20 Worldcup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X