For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூர்யகுமாருக்கு வாய்ப்பு தராமல், 3 உலககோப்பையை மிஸ் பண்ணிட்டோம்.. கிரிக்கெட் விமர்சகர் நாணி கருத்து

தோஹா : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூரிய குமார் யாதவ் நடப்பாண்டில் மட்டும் 1151 ரன்கள் விளாசி அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் இரண்டு ஆண்டுகள் தாமதமாக இந்தியாவுக்காக விளையாடுகிறார் என்று ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார்.

தற்போது இது குறித்து பேசிய கிரிக்கெட் விமர்சகரும் வர்ணனையாளருமான நாணி சூரியகுமார் யாதவை இந்தியா முன்பே நடு வரிசையில் பயன்படுத்தியிருந்தால் நமக்கு மூன்று உலகக்கோப்பை கிடைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் ,ஐபிஎல் தொடரில் சூரியகுமார் யாதவ் 2015 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வருகிறார் .

முதல் போட்டியே இப்படியா.. ஜியோ நிறுவனத்தை வெளுக்கும் கால்பந்து ரசிகர்கள்..அப்போ ஐபிஎல் நிலைமை என்ன? முதல் போட்டியே இப்படியா.. ஜியோ நிறுவனத்தை வெளுக்கும் கால்பந்து ரசிகர்கள்..அப்போ ஐபிஎல் நிலைமை என்ன?

வெற்றி காணவில்லை

வெற்றி காணவில்லை

ஆனால் அதே காலத்தில் இந்திய அணிக்கு நடு வரிசையில் சரியான வீரர் கிடைக்கவில்லை. குறிப்பாக இந்திய அணி ரெய்னா, ரஹானே யுவராஜ் ,தினேஷ் கார்த்திக் ,ராயுடு, விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் ஐயர் ,கே எல் ராகுல், ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே போன்ற வீரர்களை நம்பர் நாலாவது இடத்திற்கு சுழற்சி முறையில் பயன்படுத்தி வெற்றி காணவில்லை என்று நாணி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஐசிசி கோப்பை

மூன்று ஐசிசி கோப்பை

ஆனால் 2015 ஆம் ஆண்டு சூரியகுமார் யாதவும் அந்த இடத்திற்கு தகுதியான நபர் என்று தனது ஐபிஎல் ஆட்டங்கள் மூலம் நிரூபித்து இருப்பதாக நானி கூறியுள்ளார். தேர்வு குழுவினர் மட்டும் முன்பே சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தால் இந்நேரம் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றிருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வாய்ப்பு தரவில்லை

வாய்ப்பு தரவில்லை

சூரியகுமார் யாதவ் தற்போது 32 வயதை கடந்துவிட்டார். இன்னும் அவர் இரண்டு வருடங்கள் விளையாடினாலே அது மிகப்பெரிய விஷயமாகும். சூரியகுமார் அளவு போன்ற வீரர்களை நாணி சொல்வது போல் பிசிசிஐயை பயன்படுத்துவதில்லை. தகுதியான நபர்களை தேர்வு செய்தாலே பாதி வெற்றி பெற்றது போல் என்பது கிரிக்கெட் ஃபார்முலா. தற்போது சூரிய குமாருக்கு பிசிசிஐ என்ன கொடுமை செய்ததோ அதே மாதிரி தான் பிரித்விஷா சப்ராஸ்கான் ஆகிய வீரர்களுக்கும் வாய்ப்பு தராமல் பிசிசிஐ இழுத்து அடித்து வருகிறது.

சூர்யகுமார் கருத்து

சூர்யகுமார் கருத்து

தமக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து பேசிய சூரியகுமார் யாதவ், அது மிகவும் கடினமான காலமாக இருந்தது. இருப்பினும் ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பி காத்திருந்தேன். எப்படி பெரிய கிரிக்கெட் வீரராக ஆவது என்பதை கவனம் செலுத்தி வந்தேன். இப்போது சூழல் தலைகீழ் மாறியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். சூரியகுமார் யாதவ் 32 வயதாகியும் இன்னும் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 21, 2022, 22:47 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
Tamil Cricket Commentator Nanee feels India would win 3 icc cup if suryakumar selected in team சூர்யகுமாருக்கு வாய்ப்பு தராமல், 3 உலககோப்பையை மிஸ் பண்ணிட்டோம்.. கிரிக்கெட் விமர்சகர் நாணி கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X