குடும்பத்துக்காக கிரிக்கெட்டுக்கு விடுமுறை..2 ஆண்டுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் வழியில் முரளி விஜய்

நெல்லை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான முரளி விஜய் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார்.

38 வயதான முரளி விஜய், கடைசியாக இந்திய அணிக்காக 2018ஆம் ஆண்டு விளையாடினார். 2020ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியதற்கு பிறகுவிஜய் பிரேக் எடுத்தார்.

“ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்! “ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்!

அதன் பிறகு, முரளி விஜய், எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார்.

கிரிக்கெட்டிலிருந்து பிரேக்

கிரிக்கெட்டிலிருந்து பிரேக்

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு டிஎன்பிஎல் மூலம் கிரிக்கெட் போட்டியில் முரளி விஜய் விளையாடுகிறார். திருச்சி அணிக்காக இம்முறை விளையாடும் முரளி விஜய், தனது செயல் திட்டம் குறித்து பேசினார். 2 ஆண்டுகள் என் தனிப்பட்ட காரணத்திற்காக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தேன். எனக்கு மிகவும் இளம் குடும்பம், அவர்களுடன் அருகில் இருந்து கவனித்து கொண்டேன்.

மீண்டும் கிரிக்கெட்

மீண்டும் கிரிக்கெட்

என் தனிப்பட்ட வாழ்க்கை மிக விரைவாக சென்றதால், கிரிக்கெட்டுக்கு ஒரு பிரேக் போட்டேன். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தோன்றினாலும், காயங்களால் அவதிப்பட்டேன். என்னை நானே உணர்ந்து கொள்ள இந்த பிரேக் தேவைப்பட்டது. தற்போது கிரிக்கெட்டுக்கு திரும்ப டிஎன்பிஎல் மூலம் வாய்ப்பு கொடுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு நன்றிகள்.

அடுத்த இலக்கு

அடுத்த இலக்கு

எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும், என் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தவிர தற்போது எந்த குறிக்கோளும் எனக்கு இல்லை. வாழ்க்கை எங்கு கொண்டு செல்கிறது என்று பார்ப்போம். டிஎன்பிஎல் தொடர் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். இளைஞர்களுக்கு நான் சொஙலல கொள்வது எல்லாம், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.

தமிழக இளைஞர்களுக்கு வரம்

தமிழக இளைஞர்களுக்கு வரம்

நடப்பு டிஎன்பிஎல் தொடரில் நிறைய இளைஞர்களுக்கு தோள் கொடுத்து உதவி செய்ய உள்ளேன். 50 ஓவர் மற்றும் டி20 போட்டியில் தமிழக கிரிக்கெட் அணி சிறந்து விளங்குகிறது என்றால் அதற்கு டிஎன்பிஎல் தொடர் தான் காரணம். டிஎன்பிஎல் மூலம் தான் தற்போது வரை 6 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Tamilnadu Batsman Murali vijay is Playing in TNPL cricket after 2 years குடும்பத்துக்காக கிரிக்கெட்டுக்கு விடுமுறை..2 ஆண்டுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் வழியில் முரளி விஜய்
Story first published: Thursday, June 23, 2022, 20:18 [IST]
Other articles published on Jun 23, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X